தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு :மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் ஆரல்வாய் மொழி, தோவாளை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணசாமி கோயில் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ALSO READ  2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக சோனியா காந்தி அழைப்பு
Cyclone Ockhi: Heavy rains lash Tamil Nadu, Kerala, toll mounts to 12 -  Rediff.com India News

மேலும் அவர்களுக்கு பாய், படுக்கை விரிப்புகளை வழங்கினார். தொடர்ந்து. திருப்பதி சாரம், குமாரகோயில் பகுதிகளில் குளங்களில் ஏற்பட்ட பாதிப்பையும் முதல்வர் பார்வையிட்டார். முதல்வருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி. எம்.எல்.ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…..

Shobika

பீகார் முதல்வரின் தமிழக பயணம் ரத்து.!

Shanthi

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை:

naveen santhakumar