தமிழகம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கோலாகல கொண்டாட்டம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காஞ்சிபுரம்:

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கோலாகலமாக  கொண்டாடப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒருங்கிணைந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன் தலைமையில் ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ALSO READ  லஞ்சம் வாங்குவது பிச்சையெடுப்பதற்கு சமம்-உயர்நீதிமன்றம்:

அவரது தலைமையில் நடைபெற்ற விழாவில், காலையில் குன்றத்தூரில் உள்ள சிவன் கோவிலில் ரஜினிகாந்தின் பெயரில் சிறப்பு அபிஷேகம் அதனையடுத்து, அன்னதானம் நடைபெற்றது. மேலும், பம்மல், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட  பகுதிகளிலும் அன்னதானமும்,  இலவச வேட்டி, சேலைகள், தையல் இயந்திரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. 

இதுதவிர, வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே ரத்ததானமும் நடைபெற்றது. இந்த விழாவில், ஜெ.ஜெயகிருஷ்ணன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடைகள் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை…..

naveen santhakumar

கொரோனாவை தடுக்க செல்லூர் ராஜுவின்- ஜப்பான் டெக்னிக்… 

naveen santhakumar

அரசு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயம்:

naveen santhakumar