தமிழகம் ஜோதிடம்

கடைகள் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்திலும் பெயர் பலகை தமிழில் இருக்கவேண்டும் என்கிற அரசாணையை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால் I.A.S தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொழிலாளர் நல ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் என அனைத்திலும் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என அரசு ஆணைகள் (GO) எண் – 3312 நாள் 29.12.1983 மற்றும் எண் 499 நாள் 29.12.1984-ம் ஆண்டிலிருந்து முறையே 1948-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும், 1959-ம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் விதிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

மேற்படி அரசாணைகளின்படி கடைகள், வனிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும், மற்ற மொழிகள் பெயர் பலகையில் உபயோகிக்கப்படுகையில் ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும் மற்ற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

ALSO READ  பட்டாசு ஆலை வெடி விபத்து; பணமில்லா காசோலையை வழங்கிய நிர்வாகம்; அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டோர்! 

இவ்வாறு கடைகள், வனிக நிறுவனங்களில் பெயர் பலகை வைப்பதில் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னையில் புயல்,மழை பாதிப்பு சேதங்களை ஆய்வு செய்கிறது மத்திய குழு :

naveen santhakumar

கொரோனா பரவல்: சென்னை,கோவை, மதுரை உட்பட 5 மாநகராட்சிகளில் முழுமையான ஊரடங்கு அமல் – தமிழக அரசு…..

naveen santhakumar

பேருந்து படிக்கட்டில் நின்று மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர்,நடத்துநர் மீது நடவடிக்கை

naveen santhakumar