தமிழகம்

ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன், தன்னை சீக்கிரமாக விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கினை தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஏன் இவ்வளவு காலதாமதப்படுத்துகிறார்????? எனவும் அவருக்கு தமிழக அரசு ஆலோசனை வழங்க வேண்டாமா????? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் ஆளுநர் மேலும் காலதாமதப்படுத்தாமல் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

ALSO READ  பேரறிவாளன் விடுதலை மூலம் நிலைநாட்டப்பட மாநில உரிமை! - முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து..

கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்னை ஐகோர்ட் வழங்கிய பரோல் காலம் நிறைவடைவதால், பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும், பேரறிவாளன் சிகிச்சைக்கு செல்லும்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசுக்கு கோர்ட்டு  உத்தரவிட்டனர்.பரோல் காலம் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து நீதிபதிகள் இன்று உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரச்சாரத்தின் போது கைது செய்யப்பட்ட உதயநிதி மற்றும் தொண்டர்கள் விடுதலை:

naveen santhakumar

சசிகலாவை காண எங்களையும் அனுமதியுங்கள்; அமமுகவினர் போராட்டம் !

News Editor

ரெட் அலர்ட் – கன மழை காரணமாக விடுமுறை

naveen santhakumar