தமிழகம்

ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம் – என்னனு தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னம்பலம்:ரேஷன் கடைகளில் வெளியாட்கள் இருக்கக் கூடாது!

தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி அத்துறையின் உதவி ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

தமிழகத்தின் ரேஷன் கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில், நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்களை கடைகளுக்கு கொண்டு வருவதை முழுமையாக முடிக்க வேண்டும்.

ALSO READ  தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்கிய நிறுவனம் :

இதன் காரணமாக நவ 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும். அத்துடன் நவம்பர் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை திறக்கப்பட்டு, அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த முடிவானது கடந்த 11-ந் தேதி உணவுத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் புதிய நடைமுறை

இதனிடையே தமிழகத்தில், பனை தொழிலில் ஈடுபட்டு வரும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு “கற்பகம்” என்ற பெயரில் ரேஷன் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

naveen santhakumar

நளினிக்கு பரோல் கேட்டு தாய் வழக்கு… தமிழக அரசு சொன்னது என்ன?

naveen santhakumar

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு – கவர்னரை சந்தித்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

News Editor