தமிழகம்

தமிழகத்தில் 144 தடை – கலெக்டர் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெரம்பலூர் நகராட்சியில் வணிக நிறுவனங்கள் செயல்படும் 7 பகுதிகளில் நாளை முதல் ஆகஸ்ட் 10 வரை 144 தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

pbl lock

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

கொரோனா வைரஸ் 3ஆவது அலை வராமல் தடுக்க தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அந்த வகையில் பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர், லப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ்கண்ட பகுதிகளுக்கு மட்டும் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 144-ன் கீழ் நாளை (ஆகஸ்ட் 04) காலை 6 மணி முதல் வருகிற 10ஆம் தேதி மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

பெரம்பலூர் நகராட்சியில், சிவன் கோவில் முதல் வானொலி திடல் சந்திப்பு வரை, வானொலி திடல் முதல் பழைய பஸ் நிலையம் வரை, பழைய பஸ் நிலையம் முதல் காமராஜர் வளைவு வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ  தேன்மொழி பி.ஏ. சீரியலின் துணை நடிகர் வெட்டிக்கொலை :

மேலும், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட் பகுதி, போஸ்ட் ஆபிஸ் தெரு, கடைவீதி என்.எஸ்.பி. ரோடு, பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

அரும்பாவூர் பேரூராட்சியில் தழுதாழை சாலை முதல் அரும்பாவூர் பேரூராட்சி அலுவலகம் வரை, பாலக்கரை முதல் அ.மேட்டூர் வரை அடங்கும்.

லப்பைக்குடிகாடு பேரூராட்சியில், மாட்டு பாலம் முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை அடங்கும். மேற்கண்ட பகுதிகளில் கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.

ALSO READ  கோவை சின்மயா வித்யாலயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூரில் கைது

இதனிடையே, மருந்தகங்கள், பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கான செயல்பாடுகள் மட்டும் உரிய காற்றோட்ட வசதியுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இதனை தவிர்த்து பிற விற்பனை மையங்கள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே உரிய காற்றோட்ட வசதியுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் அரசின் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா… டென்ஷனான விஜய் சேதுபதி- காரணம் என்ன??

naveen santhakumar

சாதிக்குள் என்னை அடக்க நினைத்தார்கள்; சரத்குமார் குற்றசாட்டு !

News Editor

பட்டதாரிகளுக்கு அட்டகாசமான வேலைவாய்ப்பு !

naveen santhakumar