சினிமா

வேற மாரி வேற லெவல்: வாழ்க்கை தத்துவங்களை அள்ளித்தெளித்த தல…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நேற்று இரவு ‘வலிமை’ படத்தின் முதல் பாடலான ’நாங்க வேற மாரி’ பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. மேலும் வேற லெவல் அஜித்தை காட்டி அஜித் ரசிகர்களைப் பரவசப்படுத்தியிருக்கிறது படக்குழு.

வலிமை அஜித்

விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் இந்தப்பாடல்தான் படத்தின் ஓப்பனிங் பாடல். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘’நாங்க வேற மாறி’’ தல ரசிகர்களின் ஆன்தெமாக மாறியுள்ளது.

முழுக்க முழுக்க அஜித் அதிகம் பயன்படுத்தும் வாழ்க்கைத் தத்துவ வரிகளைக் கொண்டு எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

ALSO READ  30 ஆண்டுகளுக்கு பின் மணிரத்னத்துடன் கைகோர்க்கும் வில்லன் :
அஜித் வலிமை

’தீனா’, ’பில்லா’, ’ஏகன்’, ‘பில்லா 2’, ’மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என அஜித், யுவன் கூட்டணி எப்போதும் ரசிகர்களுக்கு சூப்பர் ஹிட் கூட்டணியாக அமைந்துள்ளது என்பதால் ’வலிமை’ படத்தின் பாடல்களுக்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

சமீபத்தில், வெளியான ’வலிமை’ மோஷன் போஸ்டர் டீசரின் பிஜிஎம்மும் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது, ‘நாங்க வேற மாரி’ பாடல் வெளியாகி அஜித் -யுவன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

ALSO READ  'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன் காலமானார்.....

திருவிழாவில் அஜித்தின் அறிமுகப் பாடலாக அமைந்துள்ள, இப்பாடல் ரசிகர்களுக்கு பெருவிழாவாக அமைந்திருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் மட்டுமல்லாமல், ’தெருக்குரல்’ அறிவு, தாமரை, உள்ளிட்ட பலரும் வலிமை படத்திற்காக பாடல் எழுதியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அனில் கபூரின் ஏகே வெர்ஷஸ் ஏகே படத்திற்கு விமானப்படை எதிர்ப்பு 

News Editor

இளையராஜா ஸ்டூடியோவிற்கு திடீர் விசிட் அடித்த ரஜினி..!

News Editor

நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கிய நடிகைக்கு 20 லட்ச ரூபாய் அபராதம்…!!!!

Shobika