தமிழகம்

வீழ்ச்சி கண்ட டாஸ்மாக்.. நாளுக்கு நாள் குறையும் மது விற்பனை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டாஸ்மாக் மதுக்கடைகள் திடீரென வீழ்ச்சி அடையத் துவங்கி உள்ளது. நேற்று தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை 90 கோடியாக குறைந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் எப்பொழுதெல்லாம் விழுகிறதோ அப்பொழுது பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் தூணாக இருப்பவை மதுபானக்கடைகள். இந்நிலையில் மதுபான கடைகளில் விற்பனை குறைய துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் குறிப்பிட்ட கடைகள் தவிர டாஸ்மாக் உள்பட மற்ற கடைகள் மூடப்பட்டன. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. 

ALSO READ  சரக்கு கிடைத்த சந்தோஷத்தில் பாட்டி செய்த காரியம்...

அதேசமயம் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது ஆகியவற்றை கடைபிடிக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நிதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தடையை நீக்கியது. 

இதனை தொடர்ந்து ஏழு வண்ண டோக்கன்கள் அச்சிடப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் இயக்கம் தொடங்கியது. 

டாஸ்மாக்  திறந்த சனிக்கிழமை மட்டும் 163 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து ஞாயிற்றுகிழமை 133.1 கோடிக்கும், திங்கட்கிழமை 109.3 கோடிக்கும் மது விற்பனையானது. இந்நிலையில் நேற்று 91.5 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக மது விற்பனையை ஒவ்வொரு நாளும் குறைய ஆரம்பித்துள்ளது.

ALSO READ  பள்ளியில் மதுபான வகைகள் விற்பனை- பொதுமக்கள் எதிர்ப்பு...

இதுவரையில் மது விற்பனை வசூலில்  முதல் இடம் இருந்த மதுரையை பின்னுக்கு தள்ளி திருச்சி நேற்று அதிக வசூல் செய்துள்ளது. 

நேற்றைய டாப் 3 மண்டலங்கள்

திருச்சி – 23.2 கோடி.

மதுரை- 22.1 கோடி.

சேலம் – 20.6 கோடி.

இதுவரையில் சென்னை மண்டலம் களத்தில் இறங்கவில்லை களத்தில் இறங்கினால் ஆட்டத்தின் முடிவு நிச்சயமாக மாறக்கூடும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திருவண்ணாமலை தீபத்திருவிழா: கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி…!

naveen santhakumar

பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி- தமிழக அரசு..

naveen santhakumar

நெல்லை சாஃப்டர் பள்ளிக்கு நாளை முதல் விடுமுறை… வெளியானது அதிரடி உத்தரவு!

naveen santhakumar