தமிழகம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா: கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

Tiruvannamalai Karthigai Deepam: திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்  திருவிழா 2021 பக்தர்களுக்கு அறிவிப்பு - tiruvannamalai arulmigu  arunchalaeswarar temple karthigai deepam notification ...

கடந்த 10ம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவிலில் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, கார்த்திகை தீபத் திருவிழாவில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

ALSO READ  விஷாலின் 'சக்ரா' படத்திற்கு இடைக்கால தடை..!

அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது. தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், திருவண்ணாமலையில் இன்றும், நாளையும் 5,000 உள்ளூர் பக்தர்கள், 15 ஆயிரம் வெளியூர் பக்தர்கள் என 20,000 பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முரசொலியின் 80 வது பிறந்தநாள்

News Editor

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Admin

பேரறிவாளன் விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

Admin