தமிழகம்

இவர்களுக்கு கட்டணமில்லை… அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையிலும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும், 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ”பிளஸ் 2 தேர்வுக்கான கட்டணத்தை ஜனவரி 20-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். எம்பிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மேலும், பார்வை மாற்றுத்திறனாளி, செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கும் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது. இது தவிர, தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  பிளஸ் 2 மார்க் அறிவிப்பு!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை ஆணை திறப்பு!

News Editor

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் மருத்துவமனையில் அனுமதி !

News Editor

அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து:

naveen santhakumar