தமிழகம்

காஞ்சிபுரம் அருகே அரங்கேறிய கொடூரம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காஞ்சிபுரம்: 

காஞ்சிபுரம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் 21 வயது மகன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிபாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி சாம்சன். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மனைவி பெயர் ரோசி.இவர்களுக்கு 3 மகன்கள். மூத்தமகன் எலியா தனியார் கம்பெனியில் பணி புரிகின்றார். இரண்டாவது மகன் எலிசா (வயது 21) பிளஸ்-2 முடித்துவிட்டு சர்ச்சுகளில் பாடல் பாடும் பாடகராக உள்ளார்.மூன்றாவது மகன் எட்வின் தனியார் கல்லூரியில் B.sc நர்சிங் படித்து வருகின்றார்.

ALSO READ  விஜய் அபாரதத்திற்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு..!

இரண்டாவது மகன் எலிசா செம்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள உறவினர் ராமு என்பவரின் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்காக தன்னுடைய பல்சர் வண்டியை எடுத்துக்கொண்டு ராமுவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பிறந்தநாள் விழாவை முடித்துக்கொண்டு ராமுவின் தம்பி லட்சுமணனை பைக்கில் அழைத்துக் கொண்டு வந்து அவரது வீட்டில் விட்டு விட்டு தன்னுடைய வீட்டுக்கு சிறுகாவேரிப்பாக்கம் பிடிஓ அலுவலகம் பின்புறம் வழியாக வரும்போது குட்டை தெரு என்ற இடத்தில் எலிசாவின் வண்டியை 3 மர்ம நபர்கள் மடக்கி கையில் வைத்திருந்த இரும்பு ராடால் தாறுமாறாக தாக்கி கொலை செய்துவிட்டு பல்சர் வாகனத்தை எடுத்து கொண்டு தப்பினர்.

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா பரவல்; புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு !

தகவலறிந்த பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

எலிசா அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவர் என்றும் யாரிடமும் வம்பு தும்புக்கும் போகாதவர் என்றும் மதுபானம் போன்ற பழக்க வழக்கங்கள் இல்லாதவர் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

38 சதவீதம் பேர் மட்டுமே சரியாக மாஸ்க் அணிகிறார்கள் – சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்

News Editor

விஜயகாந்துக்கு 3 உறுப்புகள் அகற்றம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Shanthi

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5% ஒதுக்கீடு கோரி மனு

Admin