தமிழகம்

அண்ணா பல்கலை.; துணைவேந்தர் சூரப்பா காலத்தில் முறைகேடு நடந்தது உண்மை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா காலத்தில் முறைகேடு நடந்தது உண்மை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார்; விசாரணை அறிக்கை  முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு | Dinamalar

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய தமிழக அரசு உத்தரவிட்டது.

ALSO READ  மாணவர்களுக்கு ஆய்வக வகுப்புக்களை முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு !
சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் புகார்.. அண்ணா பல்கலைக்கு நோட்டீஸ் அனுப்ப  விசாரணை ஆணையம் முடிவு!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

அதில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலையும், விரிவான பதில் மனுவையும் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி பார்த்திபன், சூரப்பா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

ALSO READ  தொழில் கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

இதனிடையே அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, எனது பணியை மிக உயர்ந்த நேர்மையுடன் செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2015 மாதிரி நடந்திட கூடாது – ‘கார் பார்க்கிங்’காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்

naveen santhakumar

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள் !

News Editor

UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சின்னி ஜெயந்த் மகன்!….

naveen santhakumar