தொழில்நுட்பம்

இனி ஜியோ அவ்வளவு தான்…களத்தில் இறங்கும் WiFi Dabba நிறுவனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூருவில் WiFi Dabba என்ற நிறுவனத்தின் மலிவு விலை இணைய சேவையால் ஜியோ நிறுவனம் பின்தங்கியுள்ளது.

இந்திய அளவில் 37 கோடி மக்கள் ஜியோ நிறுவன சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடைக்கோடி மக்களும் இணையத்தை உபயோகிக்க முக்கிய காரணம் அதில் கொடுக்கப்பட்ட மலிவு விலை இணைய திட்டங்கள்.

ஆனால் தொலைத்தொடர்பு சந்தைகளில் ஏற்பட்ட கட்டண உயர்வு காரணமாக பல்வேறு திட்டங்களை ஜியோ மாற்றியமைத்தது. இதனால் பயனாளர்கள் பயன்படுத்தும் இணைய அளவு குறைந்தது. ஜியோவின் ஃபைபர்களில் திட்டங்களில் ஏற்பட்ட பின்னடைவு அந்நிறுவனத்தை வெகுவாக பாதித்தது.

ALSO READ  கான்ட்ரா ஷூட்டிங் கேம் விரைவில்.....முன்பதிவு தொடக்கம்....!!!!

இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த WiFi Dabba என்ற நிறுவனம் ஜியோவுக்கு போட்டியாக மலிவு விலை இணைய சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. 1 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா அளவில் வழங்கப்படும் இணைய சேவையால் அந்நகரில் ஜியோ நிறுவனம் பின்தங்கியுள்ளது.

“சூப்பர்நோட்ஸ்” என்ற பெயரில் வைஃபை டப்பா ஜியோ தனது கட்டண உயர்வுக்கு காரணமாக சொன்ன இணைய தேடல்கள், சாஃப்ட்வேர்கள், இணைய கட்டமைப்பு ஆகியவற்றை குறைந்த விலையில் வழங்குகிறது. பெங்களூருவில் தனது சேவைகளை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தி வரும் WiFi Dabba விரைவில் இந்தியா முழுமைக்கும் தனது சேவையை கொண்டு வரவுள்ளது. மொபைல் ஓடிபி மூலம் நாமும் இச்சேவையை பயன்படுத்தலாம்.

ALSO READ  Zoom App..திரையில் மாணவர்கள்.. கருப்பு கவுனில் ரோபோ. வித்தியாசமான பட்டமளிப்பு விழா….

மேலும் பிரச்சனையாக கருதப்படும் சராசரி இணைப்பு மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இத்தகைய சேவையை ஃபைபர் மூலம் வழங்குவதாக WiFi Dabbaவின் தலைமை நிர்வாக அதிகாரி கரம் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விமானத்தை மிஞ்சும் தேஜாஸ் ரயில் சேவை

Admin

ஆப்பிள் மற்றும் சாம்சங்கை பின்னுக்கு தள்ளிய சியோமி :

Shobika

புத்தாண்டு அன்று வாட்ஸப்பில் இத்தனை மெசேஜ்களா?- அதிர்ச்சி தகவல்

Admin