தொழில்நுட்பம்

இனி வாட்ஸ் அப்பில் உங்களை பிளாக் செய்தவற்கும்….. மெசேஜ் அனுப்பலாம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்று, குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால், குறைந்தது ஆறு மொபைல் போன்களாவது அவர்கள் வீட்டில் இருக்கும் நிலை ஏறக்குறைய வந்து விட்டது. கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போன இந்த காலகட்டத்தில், தனித் தனி தீவாக குடும்பத்தில் உள்ளவர்கள் ஆளுக்கொருவராய் கைகளில் மொபைல் போனை வைத்துக் கொண்டு, வாட்ஸ் -அப்பில் யாருடனோ தகவல் பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.

நண்பர்கள், உறவினர்கள் என சில      சமயங்களில் கோபத்திற்குள்ளாகி, நமது மொபைல் எண் அவர்களால் ப்ளாக் செய்யப்பட்டிருந்தாலும் கூட, அவர்களுக்கு ஈஸியாக வாட்ஸ்-அப் மூலம் உங்களால் மெஸேஜ் அனுப்ப முடியும்.ஒருவர், உங்களது மொபைல் எண்ணை பிளாக் செய்திருந்தாலும், அவருக்கு எப்படி மெசேஜ் அனுப்ப வேண்டும்???அல்லது எப்படி ப்ளாக் செய்யப்பட்டிருக்கும் உங்களது மொபைல் நம்பரை அன்பிளாக் செய்வது???? என்பதை பார்ப்போம்.

இதற்கு நீங்கள், வேறொரு நம்பரில் இருந்து ஒரு வாட்ஸ் அப் குரூப் உருவாக்க வேண்டும். அதில் உங்களை பிளாக் செய்தவரின் எண்ணை இணைத்து விட்டு, உங்களது எண்ணையும் இணைத்து விட்டு, புதிய குரூப் உருவானவுடன், புது நம்பரை குரூப்பில் இருந்து வெளியேற்றி விடலாம். இப்போது நீங்கள் எந்த மெசேஜை அந்த குரூப்பிற்கு அனுப்பினாலும் அந்த மெசேஜ், உங்களை பிளாக் செய்தவருக்கு சென்றடையும். இதில், ஒரு சிக்கல் உள்ளது. உங்களை ப்ளாக் செய்தவர், அந்த குரூப்பில் இருந்து பிடிக்காமல் வெளியேறி விடலாம். இந்த திட்டம் பலிக்கவில்லை என்றால் இதோ இன்னொரு முறையும் உள்ளது.

ALSO READ  பெண்களின் பாதுகாப்புக்காக லிப்ஸ்டிக் துப்பாக்கி

1. வாட்ஸ் அப் செட்டிங் சென்று அதில் அக்கவுண்ட் என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள்

2. அதில் உள்ள மை அக்கவுண்ட் என்ற ஆப்சனை டெலிட் செய்யுங்கள்

3. பின்னர் வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்யுங்கள்

ALSO READ  பல சிக்கல்களை கடந்து சிக்கென்று சீறி வந்த சிக்னல் ஆப் :

4. உங்கள் மொபைல் போனை ரீஸ்டார்ட் செய்யுங்கள்

5. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள்

6. அதில் வரும் குறிப்புகளின்படி OTP உள்பட அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் எந்த பேக்கப்புகளையும் ரீஸ்டோர் செய்திட வேண்டாம்

7. இப்போது உங்கள் எண் எந்த ஒரு எண்ணாலும் பிளாக் செய்யப்பட்டிருக்காது. இப்போது நீங்கள் உங்கள் காண்டாக்டில் இருக்கும் அனைவருடனும் தொடர்பு கொள்ளலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Royal Enfield BS-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

Admin

தண்ணீர் இல்லாத கழிவறையை அறிமுகப்படுத்திய பில்கேட்ஸ்

Admin

ஆன்லைன் திருட்டுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள “இரு மின்னஞ்சல்களை” பயன்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தல்:

naveen santhakumar