சுற்றுலா தமிழகம்

காமராஜர் திறந்து வைத்த கிருஷ்ணகிரி அணை.. சுவாரசியமான வரலாறு…..

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதோடு, இன்று வரை கிருஷ்ணகிரியில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க காரணமாக விளங்குவது கிருஷ்ணகிரி அணை.

இந்த பெருமை மிக்க கிருஷ்ணகிரி அணை கடந்த 1955 ஆம் வருடம் ஜனவரி 3 ஆம் தேதி கட்டும் பணி தொடங்கி 1957 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றில் கிருஷ்ணகிரி அணை (KRP DAM – KRISHNAGIRI RESERVOIR PROJECT) பணியானது 1957 நவ. 10-ஆம் தேதி, அப்போதைய அமைச்சா் கக்கன் தலைமையில், காமராஜா் அணை நீரை பாசனத்துக்கு திறந்து வைத்தாா்.

இதன் மூலம் 9,012 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாக 30 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

1957 முதல் 2020 இன்று வரை அதாவது கடந்த 62 ஆண்டுகளில் 2017 ஆம் ஆண்டை தவிர்த்து 61 ஆண்டுகளும் தன் கொள்ளளவில் குறையாத நீர் இருப்பை கொண்ட அணை என்ற சிறப்பு இதற்கு உண்டு.

இந்த அணை குறித்து ஒரு சுவாரசியமான விஷயம்.

முதலில் இப்போது உள்ள இடத்தில் அணை கட்ட முடிவு எடுக்கப்படவில்லை. கிருஷ்ணகிரியை அடுத்த பெரியமுத்தூா் கிராமத்தின் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டாா். இதற்காக 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என பொறியாளா்கள் தெரிவித்தனா்

அன்றைய சட்டமன்ற உறுப்பினர் காவேரிப்பட்டினம் நாகராஜ மணியகார் அவர்கள் முதலமைச்சர் காமராசர் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.

இப்போது ஆணை கட்ட ஆரம்பிக்கும் இடத்தில் அணை கட்டிமுடிக்கப்பட்டால் அணைக்கு மேல் பகுதியில் உள்ள மோரமடுகு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியில்லாமல் துண்டிக்க நேரிடும், எனவே மேற்கு திசையில் அணை கட்டினால் கிராம மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.

இதனை கேட்ட முதலமைச்சர் காமராசர் அவர்கள் நாகராஜ மணியகார் சொன்ன கோரிக்கை ஏற்று ஒப்புதல் அளித்தார். அணையும் மிக சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது.

சிறப்புவாய்ந்த இந்த அணை கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அதேபோல் மாவட்ட மக்கள் தங்களை இளைப்பாறிக் கொள்ள சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

Related posts

நடு இரவில் உதிக்கும் சூரியன்.. சிறைக்கைதிகளுக்கு Internet.. எந்த நாடு தெரியுமா?

News Editor

கொரோனாவால் திமுக முன்னாள் செயலாளர் மறைவு- ஸ்டாலின் இறங்கல்

naveen santhakumar

திமுகவைச் சேர்ந்த 4 ஆவது எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா…

naveen santhakumar