தமிழகம்

அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா ரூ. 5 லட்சம் நன்கொடை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:-

அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா ரூ. 5 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

மதுரையில் 6 இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அன்னவாசல் என்ற திட்டம் மூலம் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 பேருக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது. மதுரையில் தனித்திருப்பவர்கள், கைவிடப்பட்டவர்கள், கவனிப்பாரற்ற முதியவர்கள் என தாமே உணவு சமைத்துச் சாப்பிட வழியின்றித் தவிக்கும் விளிம்புநிலை மக்களுக்கு மதிய உணவினை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தருகிற முயற்சியினை கடந்த மே 1-ம் தேதி `மாமதுரையின் அன்னவாசல்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

ALSO READ  தென் மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் பெண் சிசு படுகொலை..

இந்நிலையில், மாமதுரை அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா ரூ. 5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். 

மாமதுரையின் அன்னவாசல் திட்டம் மே1-ஆம் தேதி துவக்கப்பட்டது. ஆதரவு தேவைப்படும் விளிம்புநிலை மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று மதிய உணவு வழங்கும் இத்திட்டமானது, 3000 பேருக்கு உணவு வழங்கித் துவங்கப்பட்டது.

நாள்தோறும் 4500 பேருக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. 400க்கும் மேற்பட்ட தன்னார்வளர்கள் உணர்வுப்பூர்வமாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ‘மாமதுரை அன்னவாசல்’ திட்டத்துக்கு நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் ரூ. 5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

ALSO READ  சோழவந்தான், மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு கோரொனா… 

இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

“ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்” என்பது வள்ளுவன் மொழி. ‘அகரம்’ மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது ‘ஆகாரம்’ மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது – எம்.எஸ்.பாஸ்கர் ஆவேசம்!

naveen santhakumar

தடுப்பூசி போடாவிடில் ஊதியம் வழங்கப்படாது – மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை

naveen santhakumar

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு :மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்

News Editor