உலகம்

காதலிக்க பெண் தேடிய கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட சோகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜப்பானின் கோடீஸ்வரரான யுசாகு மேசாவா தனக்கு காதலியாக இருக்க இதுவரை 27,722 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருபவர் 44 வயதான யுசாகு மேசாவா. இவர் நிலவுக்கு மனிதனை அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடிவு செய்த போது முதல் ஆளாக விண்ணப்பித்தவர் ஆவார். மேலும் தன்னை காதலிப்பவர்களுக்கு நிலவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவரது காதலியாக இருக்க விண்ணப்பித்துள்ளார்கள். ஜனவரி 17ம் தேதி அதற்கான கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் 27,722 பேர் அவரது காதலியாக இருந்து நிலவுக்கு பயணம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் முடிவு மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

ALSO READ  டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்ற சுமித் அன்டிலுக்கு எக்ஸ்யூவி700 காரின் கோல்டு எடிசனை பரிசாக வழங்கியது மஹிந்திரா நிறுவனம்

ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென அவர் தன் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து யுசாகு மேசாவா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விண்ணப்பித்த அத்தனை பேரையும் பார்க்கும் போது எனக்கு பரிதாபமாக உள்ளது எனவும், எனக்காக நேரம் செலவிட்டதற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். இதனால் பெண்கள் அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனைவிக்கு மட்டுமல்ல… கணவருக்கும் மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு…

Admin

கொரோனாவிற்கான பைசர் தடுப்பூசி போடப்பட்ட 2 பேருக்கு ஒவ்வாமை :

naveen santhakumar

கொரோனா வைரஸ் தாக்கிய முதல் இளைஞர் எப்படி இருக்கிறார் தெரியுமா?

Admin