உலகம்

என்ஆர்சி.யால் 20 கோடி முஸ்லிம்களுக்கு பாதிப்பு: அமெரிக்க நாடாளுமன்றம் அறிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் என்ஆர்சி இணைந்த குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் நிலை பாதிக்கப்படலாம், என அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு சேவை சிஆர்எஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் தன்னாட்சி ஆய்வு அமைப்பான சிஆர்எஸ், இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக ஆய்வு நடத்தி கடந்த 18ம் தேதி அறிக்கையை சமர்பித்துள்ளது.

கடந்த 1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டம், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் குடிமக்களாக மாறுவதை தடை செய்கிறது. அதன் பின் இச்சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும், எந்த ஒரு மத அம்சமும் சேர்க்கப்படவில்லை. ஆனால், சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக, நாட்டின் நடுநிலை செயல்பாட்டில் மத அடிப்படையிலான அளவுகோல் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, அதனுடன் இணைந்த குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றால் இந்தியாவில் உள்ள 20 கோடி முஸ்லிம் சிறுபான்மையினரின் நிலை பாதிக்கப்படலாம் என அமெரிக்க நாடாளுமன்றம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Share
ALSO READ  பாகிஸ்தான் அரசு அதிரடி- தடுப்பூசி போடாதவர்களின் செல்போன் இணைப்பு துண்டிப்பு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நிருபர்களுடன் கடும் வாக்குவாதம்- பாதியிலேயே செய்தியாளர்கள் சந்திப்பை நிறுத்திய ட்ரம்ப்…

naveen santhakumar

அமெரிக்கா-தைவான் இடையேயான ஒப்பந்தத்தால் எரிச்சலடையும் சீனா:

naveen santhakumar

தொடர்ந்து உயரும் கொரோனா; அச்சத்தில் உலக மக்கள் !

News Editor