உலகம்

கதிரவனுக்கு நன்றி செலுத்துவதற்காக அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொண்டாடிய சாத் விரத பூஜை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

வடமாநிலங்களில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத் விரத பூஜை என்ற ஒரு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

சாத் விரத பூஜை என்பது பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்து மத விழாவான சாத் விரத பூஜை சூரிய கடவுளுக்கும், அவரது மனைவிக்கும் நன்றி சொல்ல நடத்தப்படும் . 

இந்த பூஜையானது நான்கு நாட்களுக்கு நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர்.நான்காவது, சூரிய உதயத்தின் போது நீர் நிலைகளில் நின்று பெண்கள் படைப்பார்கள். 

மூங்கில் சிம்புகள் பின்னப்பட்ட தட்டு அல்லது முறத்தில் காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கையில் விளையும் பொருட்களை வைத்து படைப்பார்கள். சன்னமான அரிசி மாவு, நெய், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்பட்ட சுவையான பதார்தத்தை படைத்து உண்பார்கள்.

ALSO READ  400 ரூவா கேக்க குடுத்துபுட்டு…. 4000ரூவா புடுங்கிடுச்சு….. நான் பெத்த புள்ளைங்க:சூரி

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சாத் விரதபூஜை வடஇந்தியாவில் நேற்றைய தினம் நடைபெற்றது. அதேபோல், அமெரிக்காவில் வாழும் வட இந்தியர்கள் பலரும் சாத் விரத பூஜையில் பங்கேற்றனர்.அமெரிக்காவின், நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள மனலபன் ஆற்றுக்கரையில் திரண்ட 600-க்கும் அதிகமான வடஇந்திய பெண்கள் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான இந்த சாத் விரத பூஜையை நடத்தினர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் அதிகரித்துவரும் துப்பாக்கி சூடு-2 பேர் பலி

Shobika

13 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு சிறுவன் காரணமா?

Admin

29 பேரை மட்டுமே கொண்ட கிராமம்: 8 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த ஆண் குழந்தை- கொண்டாட்டத்தில் திளைத்த கிராமம்…

naveen santhakumar