உலகம்

சீனா ஏவிய அதிநவீன குவைசவ்-11 கீழே விழுந்து வெடித்து சிதறியது… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெய்ஜிங்:-

சீனா ஏவிய அதிநவீன குவைசவ்-11 என்ற  வணிக தொடர்பான ராக்கெட் தோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெய்ஜிங் நேரப்படி 12.17-க்கு சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் (Jiuquan Satellite Launch Center) இருந்து குவைசவ்-11 (Kuaizhou-11 (KZ-11)) ராக்கெட் ஏவப்பட்டது. 

ராக்கெட் ஏவப்பட்ட சில மணி நேரங்களிலேயே கீழே விழுந்தது வெடித்து சிதறியது.

courtesy.

ராக்கெட் விண்ணில் வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து சீனா விஞ்ஞானிகள்  தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தோல்விக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெறுவதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ALSO READ  உள்ளங்கை அளவு பிறந்த குழந்தையின் இன்றைய நிலைமை என்ன தெரியுமா?

சீனாவின் வெற்றிகரமான ராக்கெட் ‘குவைசவ்-1ஏ’. இதை மேம்படுத்தி அதி நவீன தொழில் நுட்பத்தில் புதிய ராக்கெட் தயாரிக்கப்பட்டது சீனா. குவைசவ் 11 என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ராக்கெட் 2.2 மீட்டர் விட்டத்தையும் 700 டன் எடையையும் கொண்டது. இந்த ராக்கெட் மூலம் 1000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் சுமந்து புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்த முடியும் என்று சீனா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்துறை கழகத்தின் துணை நிறுவனமான எக்ஸ்பேஸ் நிறுவனம் கூறியிருந்தது. மேலும், இந்த ராக்கெட்டில் திட எரிபொருள்கள் பயன்படுத்தப்படுவதால் எரிபொருள் செலவும் மிச்சம் ஆகும்.

ALSO READ  ஐநா சபைக்கு சொந்தமான காரில் பெண்ணுடன் உடலுறவு கொண்ட நபர்- வைரலாகும் வீடியோ… 

சென்டி ஸ்பேஸ் 1 எஸ் 2,  ஜுலின் – 1 கஃபன் – 02இ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்கள் குவைசவ் 11 ராக்கெட்டுடன் விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த இரண்டு செயற்கைக் கோள்களும் வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்த சீனா திட்டமிட்டிருந்தது.

இந்த ராக்கெட் விபத்து நடைபெறுவதற்கு முன் தினம் தான் தென்மேற்கு சிசுவாவில் உள்ள (Southwest Sichua) சிசாங்க்  ஏவுதளத்திலிருந்து (Xichang Satellite Launch Center) ராக்கெட் ஒன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீன மொழியில் குவைசவ் என்றால் வேகமான கலம் (Fast Ship) என்று பொருள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹிஸ்புல்லாகளை பயங்கரவாதிகள் என்று அறிவித்துள்ள செர்பியாவின் முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு…

naveen santhakumar

செவ்வாய் கிரகத்தின் சத்தம் எப்படி இருக்கும்..? “பெர்சவரன்ஸ்” பதிவு இதோ …!

naveen santhakumar

ஐஷ்கிரீமில் கொரோனா….அதிர்ச்சியில் சீனா..! 

News Editor