உலகம் தொழில்நுட்பம்

விண்வெளியில் ஒரு புதிய சகாப்தம்.. ஏவப்பட்டது ஆர்டெமிஸ்-1!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நிலவு ஆய்வு பணிக்காக நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு இன்று மதியம் 12.17 மணியளவில், கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவுக்கு கடந்த 1972ஆம் ஆண்டில் விண்வெளி வீரர்களை அனுப்பியது. அதன்பின் கடந்த 50 ஆண்டுகளாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் பரிசோதனை முயற்சி நிறைவேறவில்லை. இந்த நிலையில், மீண்டும் நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் திட்டத்தில் முனைப்புடன் நாசா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன்படி, வருகிற 2025ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதன் ஒரு பகுதியாக ஆர்டெமிஸ்-1 ராக்கெட் அனுப்ப திட்டமிடப்பட்டது. இந்த ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணில் அனுப்பப்படும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் உதவியுடன், அதனுடன் இணைக்கப்பட்ட ஆரியன் என்ற விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு தொலைவில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆர்டெமிஸ்-1, 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நவம்பர் 16ஆம் தேதி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என நாசா விண்வெளி கழகத்தின் மூத்த அதிகாரி ஜிம் ப்ரீ டுவிட்டரில் பதிவிட்டார். தொடர்ந்து 2 முறை எரிபொருள் கசிவு, 2 முறை சூறாவளி புயலால் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்ட சூழலில், இந்த முறை அந்த முயற்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நிலவு ஆய்வு பணிக்கான நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு இன்று மதியம் 12.17 மணியளவில், கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் செலுத்தப்பட்ட எட்டு நிமிடங்களுக்கு பின்னர், மைய பகுதியில் உள்ள இயந்திரம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக சென்றது. இதனை அடுத்து, ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு இருந்த ஆரியன் விண்கலம் நிலவை நோக்கி பயணிக்கிறது.


Share
ALSO READ  சீனாவால் பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழை மீட்டெடுத்த செந்தில் தொண்டமான் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனிதனுக்கு உதவிக்கரம் நீட்டிய மனித குரங்கு

Admin

கிளப் ஹவுஸ் செயலியின் ஐகானில் இருக்கும் புதிய நபர் யார் என தெரியுமா….????

Shobika

இறந்ததாக நினைத்த நண்பர்கள்… திடீரென வந்து அதிர்ச்சியளித்த முதியவர்

Admin