உலகம்

ரொனால்டோவின் புதிய Bugatti.. உலகின் காஸ்ட்லி கார்! சிறப்பம்சங்கள் என்ன??? 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லிஸ்பன்:-

போர்சுகலை சேர்ந்த தேசிய கால்பந்தாட்ட வீரரும் ஜுவென்டஸ் (Juventus) அணியின் நட்சத்திரமுமான உலகின் மிகவும் பிரபலமான கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகிலேயே மிகவும் அரிதானதும், காஸ்ட்லியானதுமான புகாட்டி நிறுவனத்தின் Bugatti La Voiture Noire அல்லது The Centodieci காரை முன்பதிவு செய்துள்ளார்.

கால்பந்தாட்ட உலகில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறியாதவர்கள் இருக்க முடியாது. கால்பந்தாட்டத்தை தாண்டி ரொனால்டோ ஒரு கார் பிரியராக அறியப்படுகிறார். இவரின் கேரேஜில் பல விலையுயர்ந்த கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இவருக்கு சொந்தமான கார்களின் ஒட்டொமொத்த மதிப்பு 264 கோடிக்கும் (30 மில்லியன் யூரோக்கள்) அதிகம் என்பது மலைப்புதரக்கூடியதாகவே உள்ளது.

35 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலிய பிரபல ஜுவென்டஸ் (Juventus) கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இத்தாலி சீரி ஏ கால்பந்து தொடரில் 36 வது முறையாக அவரின் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதில் பிரமாதமாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய ரொனால்டோ இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக உலகின் மிகவும் அரிதானதும், விலை கொண்டதுமான Bugatti La Voiture Noire காரை முன்பதிவு செய்துள்ளார். 

இக்காரின் விலை 8.5 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 75 கோடி ரூபாயாகும்). இந்த காரின் நம்பர் பிளேட்டில் CR என்ற தனது பெயரின் இனிஷியலை பொறித்துள்ளார். (ஒரு சில நாடுகளில் தங்கள் இஷ்டம் போல இனிஷியல் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.)

ALSO READ  ஐக்கிய அரபு அமீரக தூதர்- முப்படைகளின் தலைமை தளபதியுடன் ஆலோசனை:

உலகில் இந்த ரக கார்கள் மொத்தம் 10 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றை தான் ரொனால்டோ வாங்கியிருக்கிறார். 

சூப்பர் கார் பிரியரான கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ வாங்கியுள்ள இந்த 75 கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்த காரின் சிறப்பம்சங்கள்:-

இந்தக் கார் அதிகபட்சமாக மணிக்கு 380 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. 1600 குதிரைத்திறன் கொண்ட இக்கார் வெறும் 2.4 நொடிகளில் 60 கிமி வேகத்தை எட்டிப்பிடித்துவிடும் திறன்கொண்டதாகும்.

இக்கார் அடுத்த ஆண்டில் ரொனால்டோவிற்கு டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர சமீபத்தில் புகாட்டி மற்றும் நைக் நிறுவனங்கள் இன்று பிரத்தியேக காலனி (Ankle boot) ஒன்றை ரொனால்டோவிற்கு பரிசளித்தது.

ALSO READ  போயிங் விமானம் முட்டாள்களால் வடிவமைக்கப்பட்டதா?

இதன் மூலமாக நைக் நிறுவனம் Nike Mercurial Superfly CR7 Dieci என்ற விளையாட்டிற்கான புதிய காலணியை சந்தைப்படுத்தி உள்ளது. 

புதிய வரவான Bugatti La Voiture Noire காரை தவிர்த்து ரொனால்டோவிடம் Bugatti Veyron Grand Sport Vitesse, Ferrari F430, Phantom Rolls-Royce, Lamborghini Aventador, Ferrari 599 GTO, Maserati GranCabrio, Lamborghini Aventador, The Bentley Continental GTC, McLaren MP4 12C மற்றும் McLaren Senna போன்ற சூப்பர் கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விலையுயர்ந்த கார்கள் மட்டுமல்லாது ரொனல்டோவிடம் 88 அடி நீள சொகுசு படகு ஒன்றும் உள்ளது. இதன் மதிப்பு 5.5 மில்லியன் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 41 கோடி ரூபாயாகும்). இந்த சொகுசுப் படகில் 5 விதவிதமான சொகுசான கேபின்கள் உள்ளன. இதைத் தவிர இந்தப் படகில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 6 குளியல் அறைகளும் உள்ளன. 

ரொனால்டோவின் நிகர சொத்து மதிப்பு 450- 500 மில்லியன் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மன்னிப்பு கேட்ட சுந்தர் பிச்சை…..நடந்தது என்ன?????

naveen santhakumar

2000 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைந்த உணவகம் கண்டுபிடிப்பு…….

naveen santhakumar

பொது சிறுநீர் கழிப்பிடங்கள் முற்றிலும் காணாமல் போய் வரலாற்றின் பக்கங்களில் மட்டுமே இடம்பெறும்- நிபுணர்கள்..

naveen santhakumar