உலகம்

போயிங் விமானம் முட்டாள்களால் வடிவமைக்கப்பட்டதா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போயிங் என்னும் நிறுவனம் வில்லியம் போயிங் என்பவரால் ஐக்கிய அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 1916 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. வானூர்தி தயாரிப்புத் துறையிலும், விண்வெளி, மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தித் துறையிலும் சிறந்து இது விளங்குகிறது.இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சிகாகோ நகரில் அமைந்துள்ளது. வணிகநோக்கில், பயணிகள் மற்றும் சரக்கு வானூர்தி தயாரிப்பில் உலகில் முதல் இடத்தில் உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் போயிங் நிறுவனம் மீது அபராதம் விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் விமான துறை நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.நிறுவனத்தின் 737 MAX ரக விமானங்களில் குறைபாடு கொண்ட பகுதிகளை நிறுவாமல் இருக்க தவறியதால், போயிங் மீது 5.4 மில்லியன் டாலர் அபராதத்தை விதிக்க திட்டமிடுகிறது அமைப்பு. விமான பகுதிகளில் குறைபாடு இருந்ததைச் சோதனை நிலையில் தெரியவந்த பின்னரும், போயிங் விமான சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்ததாகவும் அமைப்பு கூறியது.

இரண்டு போயிங் 737 MAX ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த மார்ச் மாதம் முதல் அவை சேவைகளில் இருந்து நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  உள்ளாடைகளுடன் பணிபுரியும் நர்ஸ்.. புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை... சர்ச்சை ஏற்படுத்திய புதிய வாய்ப்பு… 

அமெரிக்க போயிங் நிறுவனம் தனது வர்த்தகம் தொடர்பான ஆவணங்களை காங்கிரஸ் சபையில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், இந்தியா 2017-ம் ஆண்டு போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வாங்குவது தொடர்பாக அந்நிறுவன நிர்வாகிகள் இருவர் செல்போன் மெசேஜ் வாயிலாக உரையாடியதாக தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானங்களை இயக்குவதற்கான விமானப் போக்குவரத்து இயக்குநரக நிர்வாகிகள் எப்படி முட்டாளாக இருக்கிறார்கள் என ஒருவர் குறிப்பிட்ட, மற்றொருவர் ஆமோதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குரங்கு மேற்பார்வையின் கீழ் போயிங் விமானம் முட்டாள்களால் வடிவமைக்கப்பட்டது போன்ற வார்த்தைகளையும் அந்நிறுவன நிர்வாகிகள் பயன்படுத்தியது ஆவணங்களில் உள்ளது.

ALSO READ  துபாயில் இருந்து நாடு திரும்பும் வெளிநாட்டினர்- காரணம் என்ன?



Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கொரோனா என்பது வெறும் புரளி’ கோவிட் பார்ட்டியில் கலந்துகொண்ட இளம் பெண்…. 

naveen santhakumar

மீண்டும் ஆரம்பித்த சீனர்கள்… பச்சையாக பாம்பை தின்றவர் கவலைகிடம்…

naveen santhakumar

கொரோனா ஊரடங்கு உத்தரவு நேரத்தில் புதிதாக உருவாகியிருக்கும் பில்லோ சேலஞ்ச்….

naveen santhakumar