உலகம்

சர்வதேச விருது பெற்ற புகைப்படம் எது தெரியுமா???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


லண்டன்:-

த சொசைட்டி ஆஃ இன்டர்நேஷனல் நேச்சர் அண்ட் போட்டோகிராஃபர்ஸ் (The Society of International Nature and Wildlife Photographers) என்ற அமைப்பு சர்வதேச அளவில் வைல்டு லைப் புகைப்படக் கலைஞர்களுக்கான போட்டி ஒன்றை நடத்தியது.

இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்த் பேனிஸ்டர் (Keith Bannister) எடுத்த புகைப்படம் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளது. 

இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியை சேர்ந்தவர் கெய்த் பேனிஸ்டர். இவர் கடந்த மே மாதம் இங்கிலாந்தின் யோர்க் பகுதியில் ஒரு குயிலும் (Cuckoo) செட்ஜ் வார்ப்லர் (Sedge warbler) என்ற  பறவையும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட காட்சியை தனது கேமராவின் மூலம் அற்புதமாக படம் பிடித்தார்.

இந்தக் காட்சியை புகைப்படம் பிடிக்க இவர் பயன்படுத்திய கேமரா மற்றும் லென்ஸ்கள் குறித்த தகவல்கள் :-

Nikon D4 with a Nikon 300mm f/2.8 VR lens and a Nikon 1.7x teleconverter, using Aperture Priority exposure mode. The exposure was 1/800sec at f/6.3, ISO1000

ALSO READ  கடைசிவரை கொரோனா வைரஸ்க்கு மருந்து கிடைக்காமலே போகலாம்- WHO.. 

இது இதற்குப் பரிசாக DxO Nik Collection 2 என்ற சாப்ட்வேரும் இந்த அமைப்பின் ஒரு வருடத்திற்கான மெம்பர்ஷிப் ஃபும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

DxO Nik Collection 2  சாப்ட்வேர் குறித்த லிங்க் கீழே அளிக்கப்பட்டுள்ளது.

https://www.digitalcameraworld.com/reviews/dxo-nik-collection-2-review

இரண்டாவது பரிசை இங்கிலாந்தின் லண்டன் நகரை சேர்ந்த கிறிஸ்டியன் மேத்யூஸ் (Christine Matthews) தட்டிச்சென்றுள்ளார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அண்டார்டிகாவின் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள ஸ்நோ ஹில் தீவு (Snow Hill Islands) பகுதிக்கு சென்றபோது பென்குயின்கள் கூட்டம் அழகாக அணிவகுத்து நின்ற  காட்சியை தனது கேமராவின் மூலம் படம்பிடித்தார் இந்த காட்சி தான் தற்பொழுது இரண்டாவது பரிசை தட்டிச் சென்றுள்ளது.

கிறிஸ்டியன் மேத்யூஸ் பயன்படுத்திய கேமரா மற்றும் லென்ஸ் குறித்த தகவல்கள்:-

ALSO READ  தலிபான்கள் என்னை கொன்று விடுவார்கள் - அதிபர் அஷ்ரப் கனி…!

Canon EOS 7D Mk II, with a handheld Canon 100-400mm f/4.5-5.6 S USM. The exposure was 1/1000sec at f/5, ISO100.

மூன்றாவது பரிசை இங்கிலாந்தின் லண்டன் நகரை சேர்ந்த நிக் டேல்  (Nick Dale) என்பவர் பெற்றுள்ளார். 

அலாஸ்காவின் ப்ரூக்ஸ் நீர்வீழ்ச்சி (Brooks Falls) அருகே பிரவுன் நிற கிரிஸ்லி கரடி (Grizzly Bear) ஒன்று சால்மன் மீன் ஒன்றை கவ்வும் காட்சியை அழகாக படம் பிடித்திருந்தார். இந்த புகைப்படத்தில் Grizzly கரடியின் வாய்ப் பகுதிக்கு சால்மன் மீனுக்கும் இடையே சில இன்ச் இடைவெளியில் தான் உள்ளது. அவ்வளவு நேர்த்தியாக இந்த காட்சியை இந்த புகைப்படம் ஆக்கியுள்ளார்.

நிக் பயன்படுத்தி கேமரா மற்றும் லென்ஸ்கள் குறித்த விவரங்கள் :-

Nikon D800 with a 300mm lens. Exposure was 1/1600sec at f/9, ISO400.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ட்ரம்ப் கூறிய ஐடியா… விளாசி எடுக்கும் மருத்துவர்கள்…

naveen santhakumar

நான் வரமாட்டேன்…. அடம்பிடித்த சர்க்கஸ் யானை

Admin

கொரோனா நோயாளிகளுக்காக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பயன்படுத்திய வெண்டிலேட்டர் வழங்கிய குடும்பத்தினர்….

naveen santhakumar