உலகம்

தலிபான்கள் என்னை கொன்று விடுவார்கள் – அதிபர் அஷ்ரப் கனி…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற பின் முதல் முறையாக அதிபர் அஷ்ரப் கனி வீடியோ மூலம் தன்னை பற்றிய செய்தியை வெளியிட்டு உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றினர். இதனால் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலீபான்கள் வசமானது. அதற்கு முன்னதாக தலிபான்கள் நெருங்கி வருவதை அறிந்த அதிபர் அஷ்ரப் கனி குடும்பத்தோடு நாட்டைவிட்டு தப்பியோடினார்.

அவர் அங்கிருந்து தஜிகிஸ்தான் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. ஆனால், அங்கு தரையிறங்க தஜிகிஸ்தான் அனுமதிக்காததால் ஐக்கிய அரபு அமீரகம் சென்றார்.

அஷ்ரப் கனிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மனிதாபிமான அடிப்படையில் தங்கள் நாட்டில் நுழைய அனுமதி கொடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகம் வெளிப்படையாக அறிவித்தது.

இதனிடையே நாட்டையும் நாட்டு மக்களையும் அம்போவென விட்டுவிட்டு அஷ்ரப் கனி நாட்டை விட்டு தனி விமானத்தில் வெளியேறிய போது ஹெலிகாப்டர் மற்றும் 4 கார்கள் நிறைய பணத்துடன் தப்பியதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

ALSO READ  மூன்று குழந்தைகளை கொன்ற தாய்..மனதை உருக்கும் சம்பவம்..

மேலும் நாட்டு மக்கள் தலிபான்களின் பிடியில் சிக்கியிருந்த போது பணத்தோடு அதிபர் நாட்டைவிட்டு தப்பியோடியது அதிர்ச்சிக்கும் கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது.

அதோடு அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச்செல்லும்போது 169 மில்லியன் அமெரிக்க டாலர் அரசு பணத்தை திருடி சென்றுவிட்டதாகவும், அவரை சர்வதேச போலீஸ் கைது செய்யவேண்டும் எனவும் தஜிகிஸ்தான் நாட்டிற்கான ஆப்கானிஸ்தான் தூதர் முகமது ஜாகீர் அக்பர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், நேற்று தனது ஃபேஸ்புக் பக்கம் மூலமாக வீடியோவில் தோன்றி நாட்டைவிட்டு வெளியேறியதை குறித்து மவுனத்தை கலைத்துள்ளார் அஷ்ரப் கனி

எனது காலனிகளை அணிய கூட எனக்கு நேரம் இல்லாத நான் எப்படி அவ்வளவு பணத்தை கொண்டு செல்வேன்.

ALSO READ  காபூல் விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

நான் காபூலிலேயே இருந்திருந்தால் நிச்சயம் வன்முறை வெடித்திருக்கும். தலிபான்களால் ஏற்படும் ரத்தக்களறியை தவிர்க்கவே நான் அங்கிருந்து தப்பி தற்போது அமீரகத்தில் வந்துள்ளேன்.

தலிபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கான் படைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தலீபானுக்கு அதிகாரத்தை அமைதியாக மாற்ற விரும்பினேன் ஆனால் அதற்குள் நிலைமை கையை மீறி போனதால் வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டது.

மேலும், எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியதன் பேரிலேயே வெளியேறினேன். அரசின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் தலிபான்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். நான் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்று அஷ்ரப் கனி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித்திற்கு கொரோனா :

Shobika

“ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது”- ரஷிய அதிபர் புதின்..

Shanthi

கொரோனா வைரஸ் தாக்கத்திலும் கூட உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரம் ஆக மாறியது இந்தியா.

naveen santhakumar