உலகம்

ஓய்வு பெற்றது கம்போடியாவின் ஹீரோ மகாவா எலி…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புனோம் பென்:-

கம்போடிய நாட்டின் கதாநாயகன் என்று வர்ணிக்கப்பட்ட 71 கண்ணி வெடி, 38 வெடி பொருட்களை கண்டுபிடிக்க உதவிய மகாவா என்ற எலி தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றது.


கம்போடிய நாட்டில் பாதுகாப்புகளுக்காக 6 மில்லியன் வரை கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளது. இந்த கன்னிவெடிகளால் இதுவரை 64 ஆயிரம் பேருக்குமேல் இறந்துள்ளனர். இதனால், கம்போடிய அரசு கொஞ்சம் கொஞ்சமாக கண்ணி வெடிகளை அகற்றி வருகிறது.

ALSO READ  ஒரே ஒரு போன் கால்...விக்ரமோட மொத்த நிம்மதியும் போச்சு…..


மனிதர்கள் அகற்றினால் உயிருக்கு ஆபத்து வரும் என்பதால், விலங்குகளை பயன்படுத்த எண்ணியது. அப்போதுதான், ஆப்பிரிக்க எலி மாகவா நிலக்கண்ணி வெடிகளை அகற்றக்கூடியது என்று கம்போடிய அரசுக்கு தெரியவந்துள்ளது. இவற்றை வெடிகளை அகற்றுவதற்காகவே மாகவா பயிற்சியும் எடுத்துள்ளது.

அந்த எலியை கம்போடியா கொண்டு வந்து கடந்த ஏழு வருடங்களில் 38 கண்ணி வெடிகள், வெடிக்காத 28 பொருட்களையும் அகற்றியுள்ளனர். அதோடு, 1 லட்சத்து 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுர அடிகளை மாகவா தோண்டியுள்ளது. இது 20 கால்பந்து ஆடுகளங்களுக்கு சமமானது என்று சொல்லப்படுகிறது.

ALSO READ  சோத்துல சாம்பாரா…!!!!!இல்ல இல்ல….. சாம்பார்-ல எலி :


இந்த எலியின் அரும்பணியை பாராட்டும் விதமாக இங்கிலாந்தின் கால்நடை அமைப்பு மாகவா எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கியுள்ளது. “மாகவா எலி ஒரு சூப்பர் ஹீரோ. மனிதர்களை காப்பாற்றுவதில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டது” என்றும் பாராட்டியுள்ளது. மேலும், இந்த வகை எலிகள் ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பார்சலில் வந்த ஒமைரான்… மக்கள் அதிர்ச்சி!

naveen santhakumar

மனிதனுக்கு உதவிக்கரம் நீட்டிய மனித குரங்கு

Admin

காபூல் மசூதி அருகே குண்டுவெடிப்பு; பொதுமக்கள் பலி..!

Admin