தமிழகம்

26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 26  ஐபிஎஸ்  அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று 19 ஐபிஎஸ் உட்பட 46 எஸ்.பி.களை தமிழக அரசு பணியிடமாற்றம் செய்த்திருந்தது. இந்நிலையில் அதனை தொடர்ந்து மேலும் 26ஐபிஎஸ்  அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழகஅரசு பிறப்பித்துள்ளது. 

இதன்படி, தமிழக கூடுதல் தலைமை செயலர் பிரபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-


சென்னை விஜிலன்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பியாக பணியாற்றி வந்த ஆர்.பொன்னி ஐபிஎஸ் மாற்றப்பட்டு, சென்னை சிலை தடுப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ  டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 17 பதக்கங்கள் பெற்று சாதனை

மதுரை மாவட்ட எஸ்.பியாக பணியாற்றி வந்த சுஜித் குமார் ஐபிஎஸ் மாற்றப்பட்டு, சென்னை என்.ஐ.பி சிஐடி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் VII பட்டாலியன், பொச்சாம்பள்ளி கமாண்டண்டாக இருந்த ஜி.சம்பத் குமார் மாற்றப்பட்டு சென்னை துணை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


சென்னை சிவில் சப்ளைஸ் சிஐடி எஸ்.பி எஸ்.சாந்தி ஐபிஎஸ் மாற்றப்பட்டு, சென்னை மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி நகர காவல்துறை, க்ரைம், போக்குவரத்து துணை ஆணையர் டி.மகேஷ் குமார் ஐபிஎஸ் மாற்றப்பட்டு, சேலம் மண்டல அமலாக்கத்துறை எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ  தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்ட எஸ்.பி பி.பெருமாள் ஐபிஎஸ் மாற்றப்பட்டு, சென்னை அமலாக்கத்துறை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.


ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி ஆர்.சிவகுமார் ஐபிஎஸ் மாற்றப்பட்டு, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் பொது நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை நகர காவல்துறை, போக்குவரத்து துணை ஆணையர் கே.சுகுமாரன் மாற்றப்பட்டு, மரைன் பிரிவு எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் எஸ்.பி டி.சண்முகப்பிரியா மாற்றப்பட்டு, சென்னை சைபர் கிரைம் எஸ்.பி-1ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் போலி தடுப்பூசிகள் இல்லை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

News Editor

கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றம்

naveen santhakumar

13 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவங்குகிறார்….

Shobika