உலகம்

நைஜீரியாவில் பயங்கரவாதம்……பள்ளிகள் மூடும் நிலை…….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அபுஜா:

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோ ஹரம் பயங்கரவாதிகள் அவ்வப்போது பள்ளி மாணவர்களை கடத்தி சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் பிற ஆயுதக்குழுக்கள் பள்ளி மாணவர்களை கடத்தி பிணைய கைதிகளாக வைத்துக் கொண்டு தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்துக் கொள்கின்றன.குறிப்பாக கடந்த சில மாதங்களாக நைஜீரியாவில் பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து மாணவர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

ALSO READ  கொரோனா பரவல்- ஜெர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை...

இந்நிலையில் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கெப்பி மாகாணத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கூடங்களை மூட மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அந்த மாகாணத்தில் தற்போது 7 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.மாகாணம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னர் மேலும் பல பள்ளிக்கூடங்கள் மூடப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மெக்ஸிகோவில் கடுமையான நிலநடுக்கம் :

Shobika

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் 303 பேர் கொல்லப்பட்டனர் :

Shobika

டவுட்டுக்கே இப்படியா…கொரோனாவால் ஒருவர் சுட்டுக்கொலை

Admin