உலகம்

சீனாவின் ஆதிக்கத்திலிருந்து தைவானை மீட்ட லீ லீ டெங்-ஹுய் மறைவு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தைபே:-

தைவான் நாட்டின் முன்னாள் அதிபரும் ‘தாய்வான் நாட்டின் ஜனநாயகத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுபவருமான லீ டெங்-ஹுய் (Lee Teng-hui) உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 97.

பின்னணி:-

லீ டெங்-ஹுய் 1923 ஆம் ஆண்டு தைவானில் பிறந்தார்.  தைவானில் பிறந்த இவர் ஜப்பானில் கல்வி கற்றார். லீ மீண்டும் தைவானுக்கு திரும்பி அரசியலில் இணைந்து 1970 ஆம் ஆண்டு விவசாயத் துறை மந்திரி ஆனார். 1988 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் சியாங் சிங்க் குவோ (Chiang Ching-kuo) மறைவைத் தொடர்ந்து இவர் தைவானின் அதிபரானார். அதன் பின்னர் 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக அதிபர் ஆனார்.

இதனை தொடர்ந்து இவர் ஆட்சி செய்த 1988-2000 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் சீனா கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து தைவானில் பல்வெறு சீர் திருத்தங்களை கொண்டுவந்தார். 

ALSO READ  இன்று உலக அருங்காட்சியக தினம் அருங்காட்சியகங்கள் குறித்து அறிந்து கொள்வோம்... 

இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் 1895 முதல் ஜப்பானின் ஆளுகையில் இருந்த தைவான், உலகப்போருக்கு பின்னர் சீனாவில் ஆளுகைக்கு கீழ் வந்தது. இதனை தொடர்ந்து தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறிவந்தது. ஆனால் தைவானை மக்கள் இதை ஏற்க மறுத்ததோடு தைவான் தனி இறையாண்மை கொண்ட தேசம் என்று முழங்கினார்கள். தனது அண்டை சேர்ந்த பகுதிகள் அனைத்தையும் தனது நாட்டை சேர்ந்தது என்று காலம் காலமாக பொய் கூறி வரும் சீனா தாய் மடி மட்டும் விட்டுவிடுமா இன்று வரையில் தைவான் தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என்று கூறி வருகிறது.

லீ தைவானை சீன ஆதிக்கத்திலிருந்து மீட்டவர் ஆவார். இதனால் லீ டெங்-ஹுய் ஜனநாயகம் (Mr.Democracy) என மக்களால் அழைக்கப்பட்டார். 

ALSO READ  இதைக் கூடவா உயிரோட சாப்பிடுறீங்க !

அதோடு பல தசாப்தங்களாக ஒரு கட்சி சர்வாதிகாரத்திற்குப் பிறகு தைவான் ஒரு நவீன, சுதந்திர சமுதாயமாக மாற வழி வகுத்த லீ டெங்-ஹுய், சர்வதேச அளவில் தைவானை ஒரு இறையாண்மை கொண்ட அரசாக மாற்ற மேற்கொண்ட தீவிர முயற்சியில் வெற்றியும் கண்டார். 

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி முதல் லீ டெங்-ஹுய் மருத்துவமனையில் சிகிச்சப்பெற்று வந்தார். இதனிடையே ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு உடலுறுப்பு செயழிலப்பு காரணமாக நேற்று லீ டெங்-ஹுய் தனது 97 வயதில் உயிரிழந்தார். 

இதனை தைபே பொது மருத்துவமனையின் துணைத் தலைவர் ஹ்வாங் ஷின்-ஜாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே முன்னாள் அதிபர் லீ டெங்-ஹுய் இன் இறப்பு தைவான் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் இத்தாலியில் பிரபலமாகும் பழங்கால ‘Wine Window’…

naveen santhakumar

போதும்… போதும்… வாங்க பூமிய காப்பாத்துவோம் – இங்கிலாந்து இளவரசர் வில்லியம்

News Editor

கொரானா தொற்று நெருக்கடியால் கல்வி சமத்துவமின்மையை பெரிதும் அதிகரிப்பு – ஐ நா தகவல்

News Editor