உலகம்

தேசிய கேமரா தினம் 2020: வரலாறும், பின்னணியும்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29ஆம் தேதி அமெரிக்காவில் தேசிய கேமரா தினம் கொண்டாடப்படுகிறது. 

புகைப்படக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் உலகம் முழுவதும் உள்ள புகைப்படக்கலைஞர்கள் அங்கீகரிக்கவும் கௌரவிக்கும் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. 

புகைப்படங்கள் நமது வாழ்க்கையோடு ஒன்றியவை புகைப்படங்கள். கடந்த கால நினைவுகளை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்து சேர்பவை.

Courtesy.

மேலும் நிகழ்கால நிகழ்வுகளை எதிர்காலத்திற்காக சேகரித்து வைக்கபடுபவை.

புகைப்படங்களும், புகைப்பட கலைஞர்களும் உலகின் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளனர். பல போர்களை வெளி உலகத்திற்கு காட்டியது, ஆப்பிரிக்க நாடுகளின் வறுமை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதும், அகதிகளில் துயர் மிகுந்த வாழ்க்கையை உலகின் கண்களுக்கு காட்சிப்படுத்தியது, வியட்நாம் போரில் நிகழ்ந்த கொடூரங்களை வெளி உலகத்திற்கு காட்டியது புகைப்படங்களும் புகைப்பட கலைஞர்களும் தான்.

Warning- Vietnam War.

அதேபோல, பிரின்சஸ் டயானா உயிரைப் பறித்தது ஒரு புகைப்பட கலைஞன் எடுத்த புகைப்படம் தான்.

போட்டோகிராபி எனப்படும் வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது பொருள் ஒளி ஆகும் கேமரா எனப்படும் வார்த்தை கேமரா அப்ஸ்க்யூரா (Camera Obscura) லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது இலத்தீன் மொழியில் இதன் பொருள் இருட்டு அறை.

புகைப்படக் கலையின் தந்தை:-

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா  மலேசியாவில் அவசரநிலை பிரகடனம் !

புகைப்படக் கலையின் தந்தை (Father Of Photography) என்று அழைக்கப்படுபவர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் (George Eastman). ஆனால் உண்மையில் இவர் புகைப்படக் கருவியை கண்டுபிடிக்கவில்லை. இவர் அதில் கூடுதலான பல சிறப்பம்சங்களை சேர்த்து மக்களிடம் புகைப்பட கலையையும், புகைப்பட கருவியும் கொண்டு போய் சேர்த்தவர் என்ற பெருமைக்குரியவர்.

Left George Eastman.

புகைப்பட கலை வரலாறு:-

உலகில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கேமரா ஊசித்துளை (Pin-Hole Camera) கேமரா ஆகும் இது 4 அல்லது 5-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 

உலகின் முதல் புகைப்படம் 1826 ஆம் ஆண்டு பிரெஞ்சு விஞ்ஞானி ஜோசப் நைஸ்போர் நெய்ப்க் (Joseph Nicéphore Niépce) என்பவரால் கேமரா அப்ஸ்க்யூரா மூலம் எடுக்கப்பட்டது.

Joseph Nicéphore Niépce
Obscura Camera.

முதல் 35mm SLR கேமராவான ‘Kine Exakta 1’-ஐ அறிமுகப்படுத்தியவர் இஹாகீ (Ihagee).

1861 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தை சேர்ந்த இயற்பியலாளர் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் (James Clerk Maxwell) கலர் புகைப்படத்தை (Photograph) அறிமுகப்படுத்தினார்.

உலகின் முதல் வண்ண புகைப்படம் சிவப்பு நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் கலவைகள் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த முதல் வண்ண புகைப்படம் என்னவென்றால் Tartan Ribbon ஆகும். 

ALSO READ  வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு

1878ம் ஆண்டு ஆங்கில புகைப்படக்கலைஞர் எட்வர்ட் மைபிரிட்ஜ் (Eadweard Muybridge)  என்பவர் இயக்கத்தை புகைப்படம் எடுத்தார்.

இவரது இந்த புகைப்படம்தான் மோஷன் பிக்சர்ஸ் (Motion Pictures) எனப்படும் இயக்க புகைப்படங்கள் எடுப்பதற்கு வழிவகுத்தது.

1926ஆம் ஆண்டு நீருக்கடியில் உலகின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது. மெக்சிக்கோ வளைகுடாவில் ப்ளோரிடா கீஸ் (Florida Keys) பகுதியில் டாக்டர் வில்லியம் லாங்லே மற்றும் நேஷனல் ஜியாக்ரபிக் புகைப்படக்கலைஞர் சார்லஸ் மார்ட்டின் நீருக்கடியில் முதல் புகைப்படத்தை எடுத்தனர்.

மும்பையைச் சேர்ந்த புகைப்பட நிரூபர் திலீஷ் பரேக் என்பவர் உலக அளவில் அதிக பழங்கால கேமராக்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது சேகரிப்பில் மொத்தம் 4425 கேமராக்கள் உள்ளன.

1858ஆம் ஆண்டு பிரான்சை சேர்ந்த காஸ்ஃபர் ஃபெலிக்ஸ் டூர்னச்சான் (Gaspar Felix Tournachon) வானில் பலூன் ஒன்றில் இருந்து உலகின் முதல் ஏரியல் புகைப்படத்தை எடுத்தார்.

உலகின் முதல் இன்ஸ்டன்ட் புகைப்படக் கருவியை கண்டறிந்தவர் சாமுவேல் ஷ்லாஃப்ராக் (Samuel Shlafrock) ஆவார். 

இதுபோன்ற பல்வேறு கட்டங்களையும், பல்வேறு பரிமாணங்களையும் கடந்து தான் தற்பொழுது நமது கைகளில் உலவும் செல்போன் கேமராக்கள் வரை வந்துள்ளது கேமரா.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேருந்து பயணிகள் மீது திடீர் தாக்குதல்:

naveen santhakumar

மியான்மர் தேர்தலில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகி ராணுவத்தினரால் சிறைபிடிப்பு:

naveen santhakumar

ட்ரம்ப் கூறிய ஐடியா… விளாசி எடுக்கும் மருத்துவர்கள்…

naveen santhakumar