உலகம்

மோசடி புகழ் நிரவ் மோடிக்கு காவல் நீட்டிப்பு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன் :

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். இந்தியா வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். 

அவர் இன்னும் லண்டன் சிறையில் தான் இருந்து வருகிறார்.அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.இந்நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக, நேற்று லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர்(Westminster) மாஜிஸ்திரேட்டு(magistrate) கோர்ட்டில் தலைமை மாஜிஸ்திரேட்டு(magistrate) எம்மா அர்புத்நாட் முன்னிலையில் காணொலி(video) காட்சி மூலமாக நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார். 

ALSO READ  அமெரிக்காவில் அதிக கொரோனா மரணங்களுக்கு காரணம் வெண்டிலேட்டர்கள் தான்- மருத்துவர்கள் பகீர்...

அவரது காவலை 29-ந்தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு(magistrate) உத்தரவிட்டார். மேலும், நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரிய வழக்கின் இறுதி விசாரணை, ஜனவரி 7 மற்றும் 8-ம் தேதிகளில் மாவட்ட நீதிபதி சாமுவேல் கூசி முன்னிலையில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

X Æ A-12 இந்தப் பெயரை உச்சரிப்பது எப்படி???

naveen santhakumar

கொரோனாவால் இத்தாலியில் பிரபலமாகும் பழங்கால ‘Wine Window’…

naveen santhakumar

வெளிநாடு செல்ல சிறப்பு சலுகை அறிவித்த இண்டிகோ நிறுவனம்

Admin