உலகம்

சுற்றுலா பயணியை கடித்து துப்பிய சுறா.. கரை ஒதுங்கிய மனித கால்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரையில் மனிதர் ஒருவரின் கால் மட்டும் கரை ஒதுங்கி இருப்பது அங்குள்ளவர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. Queensland மாகாணத்தில் உள்ள Coast of Bundaberg என்ற சுற்றலா தளத்திற்கு ஆண்ட்ரூ பேஜ் என்பவர் சுற்றுலா வந்திருக்கிறார்.

அந்த இடத்தில் கடல் அழகை கண்டு ரசித்து அவர் கடலில் நீந்த சென்றிருக்கிறார். கடலில் நீந்தி கொண்டிருந்தவர் திடீரென மாயமான நிலையில் அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது .இந்த நிலையில் திடீரென அந்த கடற்கரைப்பகுதியில் மனித கால் ஒன்று கரை ஒதுங்கியது. அது காணாமல் போன ஆண்ட்ருவின் கால் ஆக இருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு இருந்திருக்கிறது .

இந்த நிலையில் இது தொடர்பாக தடயவியல் அதிகாரிகள் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டனர் .இந்த நிலையில் அந்த காலுக்கு சொந்தமானவர் ஆண்ட்ரு என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது- குறிப்பிட்ட கடல் பகுதியில் அதிக அளவில் சுறாக்கள் இருப்பதால் சுறாக்கள் தாக்கி ஆண்ட்ரூ பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது .

ALSO READ  Cut-Copy-Paste-ன் தந்தை என புகழப்படும் லாரி டெஸ்லர் மறைந்தார்...

இந்த கோர சம்பவம் குறித்து ஆண்ட்ருவின் பெற்றோர் கூறுகையில், தங்கள் மகன் தைரியசாலியாக இருந்ததாகவும் நீச்சலில் சிறந்து விளங்கியதாகவும் ஆனால் அவன் உயிரிழந்து விட்டான் என்பதை தற்போது வரை நம்ப முடியவில்லை என்று சோகத்தோடு தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போலி கையில் தடுப்பூசி – வசமாக சிக்கிய சுகாதார ஊழியர்

naveen santhakumar

அமெரிக்காவில் புலிக்கும் கொரோனா வைரஸ்…..

naveen santhakumar

நைஜீரியருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய 8 வயது ISIS சிறுவன்

Admin