உலகம்

Cut-Copy-Paste-ன் தந்தை என புகழப்படும் லாரி டெஸ்லர் மறைந்தார்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கணினி உலகின் வரபிரசாதமாக கருதப்படும் கட், காப்பி, பேஸ்ட் செயல்பாடுகளை உருவாக்கிய லாரி டெஸ்லர் (Larry Tesler) தனது 74வது வயதில் காலமானார்.

அமெரிக்காவைச் சேர்ந்த லாரி டெஸ்லர். 1973-ல் ஜெராக்ஸ் பார்க் (Xerox Palo Alto Research Center (PARC)) ல் பணிக்கு சேர்ந்தார். அங்கு தான் Cut, Copy, Paste ஆகிய செயல்பாடுகளை உருவாக்கினர்.

1980ல் ஆப்பிள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார் அங்கு Lisa, Macintosh, QuickTime, Newton Tablet போன்ற கணினிகள் உருவாக்கத்தில் பணியாற்றினார்.

ALSO READ  அமேசான் நிறுவனத்தின்"நியூ ஷெப்பர்ட் பூஸ்டர்" விண்கலத்தின் இருக்கை மில்லியன் டாலர் கணக்கில் ஏலம்...

இதில் Lisa மற்றும் Macintosh போன்ற கணினகளில் தான் cut, copy, paste செயல்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

Apple Lisa
Apple Macintosh

ஆப்பிள் நிறுவனத்தில் 1993ஆம் ஆண்டு தலைமை விஞ்ஞானியாக உயர்ந்தார். பின்னர் 1997ல் ஆப்பிளை விட்டு விலகினார் டெஸ்லர்.

பின்னர் ஸ்டேஜ்கேஸ்ட், யாகூ, 23andme உள்ளிட்ட உலகில் பெரிய தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் மின்னணு நிறுவனங்களில் பணியாற்றி பல புதிய கண்டுபிடிப்புகளை படைத்தவர்.

ALSO READ  இளைஞரின் நேர்மைக்கு அமேசான் கொடுத்த பரிசு:

கடைசியாக அமேசான் நிறுவனத்தில் பணியாற்றிய டெஸ்லர் 2009ல் அதிலிருந்தும் விலகினார்.

அமேசானிலிருந்து விலகிய பிறகு கலிபோர்னியாவில் UXன் அலோசகராக பணியாற்றினார்

கணினி வரலாற்று அருங்காட்சியகத்தில் ‘ஜிப்சி’ (Gypsy) குறித்து டெஸ்லர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிக்கொண்டு நாட்டை விட்டு ஓடிய அதிபர் :

Shobika

ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்..

Shanthi

குளிர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

Admin