உலகம்

மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், வேதியியல், அமைதி, இலக்கியம் ஆகிய 6 பிரிவுகளில் இந்த பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

முதல் நாளான இன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. இதில், மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.

பரிசுபெற்ற விஞ்ஞானிகள்,”ஹார்வி ஜே.ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன்” ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஹெபடைடிஸ் சி வைரசை’ அடையாளம் காண இவர்களின் ஆய்வு வழி வகுத்தது.

ALSO READ  13 வயது சிறுவனிடம் ஆசிரியை இப்படி பண்ணலாமா.. !

உலகளவில் ‘ஹெபடைட்டிஸ் நோய்’ பாதிப்பால் 70 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்பட்ட கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் புற்று நோய் பாதிப்பு ஆகியவை ஏற்படும்.நாளைய தினம் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரு செயலிக்கு (App) எதிராக ஒன்று திரண்ட நான்கு சமூக வலைதளங்கள்.

naveen santhakumar

தான்சானியா நாட்டில் பழம் மட்டும் ஆடு ஆகியவற்றில் கொரோனா- அதிபர் தகவல்…

naveen santhakumar

அமெரிக்க வாழ் இந்தியருக்கு  வெள்ளை மாளிகையில் முக்கிய பதவி..! 

News Editor