உலகம்

அமைதிக்கான சர்வதேச பல தரப்பு உறவு மற்றும் ராஜதந்திர தினம்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:-

இன்று ஏப்ரல் 24 தினத்தின் சிறப்பு என்னவென்றால் இன்று அமைதிக்கான சர்வதேச பல தரப்பு உறவு மற்றும் ராஜதந்திர தினம்.

உலக அளவில் அமைதியை நிலைநாட்டவும் சர்வதேச அளவில் நாடுகளுக்கிடையேயான பிணக்குகள் நீங்கி பிணைப்பை அதிகப்படுத்தும் நோக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி அமைதிக்கான சர்வதேச பல தரப்பு உறவு மற்றும் ராஜதந்திர தினம் உருவாக்கப்பட்டது இது முதல் முதலாக கடந்த ஆண்டு ஏப்ரல் 24 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உருவாக்கம்:-

ஐநாவை தாங்கி நிற்கும் தூண்களான அமைதி மற்றும் பாதுகாப்பு வளர்ச்சி மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் ஐநாவின் சாசனம் மற்றும் 2030ஆம் ஆண்டுக்கான ஐநாவின் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த தினம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐநா சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் (Antonio Gutteres) வெளியிட்டுள்ள செய்தியில்:-

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த COVID-19 பேரிடர் நாம் அனைவரும் எந்த அளவுக்கு ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதற்காகவே ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸிற்கு எல்லைகள் கிடையாது. எந்த வேறுபாடுகளும் கிடையாது. இது ஒட்டு மொத்த உலகத்திற்கும் எதிரான போர். இந்த கொரோனாவிற்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதை ஒழித்தாக வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

மனித உயிர்களைக் காக்க நம்மால் இயன்ற அனைத்தையும் செயல்படுத்த வேண்டும். அதோடு இந்த பேரிடரால் ஏற்பட்டுள்ள சமூக மற்றும் பொருளாதார பேரழிவை நாம் அனைவரும் ஒன்றிணைந்து சரி செய்ய வேண்டும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒட்டு மொத்த உலகத்திற்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பேரழிவு இது. அதோடு நமக்கு பருவநிலை மாற்றம் என்ற மற்றொரு சவாலும் நம் முன்னால் இருக்கிறது.

ALSO READ  விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள சூரிய வளி மண்டலத்தின் சிக்கலான புகைப்படங்கள்....

ஐநா சபை தொடங்கப்பட்ட 75 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில். ஐநா சபை உருவாக்கப்பட்டதன் முக்கிய குறிக்கோள்களான சமத்துவம், சம வாய்ப்பு, சுகாதாரம், அமைதி, அனைவருக்குமான நீடித்த எதிர்காலம் ஆகியவற்றை உலக மக்களுக்கு ஏற்படுத்துவதற்கு நாம் உறுதி கொள்ள வேண்டும் என்றார்.

பின்னணி:-

முதல் இரண்டு உலகப் போர்களால் பேரழிவை சந்தித்திருந்த நாடுகள், அதிலிருந்து மீண்டு வர பெரும் முயற்சி மேற்கொண்டன. ஏராளமான உயிர்கள் பலியாகின. ஈடு செய்ய முடியாத பொருட்சேதம் ஏற்பட்டன. இதுபோன்ற நிலை மீண்டும் வராமல் இருக்க, உலக நாடுகளை சாந்தப்படுத்தும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை 1945ல் தொடங்கப்பட்டது. இருப்பினும் துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் ஓய்வின்றி செயல்பட்டு தான் கொண்டிருக்கின்றன.

இதனால் ஐ.நா சபையின் பொறுப்பு அதிகமானது. உலக நாடுகளிடையே சமாதான முயற்சியை ஏற்படுத்த தீவிரமாக செயல்பட்டது. இத்தகைய முயற்சியின் போது, 1961ல் ஐ.நா பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்து ஒன்றில் பலியானார். இதையடுத்து 1981ஆம் ஆண்டு அவர் மரணித்த செப்டம்பர் மூன்றாம் வார செவ்வாய்க் கிழமை முதன் முதலில் சர்வதேச அமைதி தினமாக ஐ.நா அறிவித்தது.

இந்த தினம் கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் மாற்றப்பட்டது. அன்று முதல் இதே நாளில் சர்வதேச அமைதி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மனித இனத்தின் பொது நலன் ஆகியவற்றை நிலைநாட்ட ஐ.நாவின் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) தொடங்கப்பட்டது. இதன் முக்கிய வாசகம் மனித உள்ளங்களில் தான் போர் தோன்றுகிறது. அதே மனித உள்ளங்களில் தான் அமைதிக்கான அரண்களும் அமைக்கப் பெறல் வேண்டும் என்பதாகும்.

ALSO READ  ஐநா சபைக்கு சொந்தமான காரில் பெண்ணுடன் உடலுறவு கொண்ட நபர்- வைரலாகும் வீடியோ… 

1956ல் ஐ.நா சபையில் ஆயுத குறைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்தரத்திற்கு பின் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற நேரு, அமைதிக்கான பஞ்சசீலக் கொள்கைகளை உருவாக்கினார். இந்தக் கொள்கைகள் உலக நாடுகளுக்கு இடையில் அமைதியை நிலைநாட்ட, எக்காலத்திற்கும் பொருந்தும்.

பஞ்சசீலக் கொள்கைகள்:-

1 – எந்த நாடும், பிற நாடுகளை தாக்கி துன்புறுத்தக் கூடாது

2 – ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடக் கூடாது

3 – அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளுடன் சமத்துவ, பரஸ்பர நல்லுறவு கொண்டு நட்பு நாடுகளாக திகழ வேண்டும்

4 – பிற நாடுகளின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை போற்றிக் காக்க வேண்டும்

5 – ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளுடன் அமைதியான சகோதரத்துவ முறையில் இணங்கியிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சி, வியாபார போட்டி, ராணுவ பலம் ஆகியவற்றால் தற்காலச் சூழல் அமைதியின்மையால் தவித்து வருகிறது. உலக நாடுகள் ஒன்றுக்கொன்று மறைமுகமாக தீங்கும் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதிலிருந்து மீட்டுக் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அவ்வாறு மீண்டு வருதலே உண்மையான அமைதி என்பதில் சந்தேகமில்லை.

சர்வதேச அமைதிக்காக நீண்ட, நெடிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அவற்றை எந்தவிதத்திலும் வன்முறை பக்கம் சென்று விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அத்தகைய அமைதியை, அரவணைப்பை நம்மில் இருந்து தொடங்குவோம். வாருங்கள் பயணிப்போம் உலக அமைதியை நோக்கி…


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வென்டிலேட்டரை மறுத்து உயிர் விட்ட 90 வயது பாட்டி நெகிழ வைக்கும் காரணம்….

naveen santhakumar

ஜி 7 அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும்; ஜி 7 மாநாட்டை ஒத்திவைக்கிறேன்- ட்ரம்ப்…

naveen santhakumar

ஜம்மு-காஷ்மீர் ஊரடங்கு வாழ்க்கையை படம் பிடித்த மூன்று பேருக்கு புலிட்சர் விருது…. புகைப்பட தொகுப்பு உள்ளே…

naveen santhakumar