உலகம் மருத்துவம்

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரசின் அறிகுறிகள் என்ன?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் கடந்த 2002ஆம் ஆண்டு சார்ஸ் என்ற வைரஸ் பரவியது. இந்த வைரஸ் சீனாவில் பரவிய சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு வேகமாக பரவியது. இந்த வைரஸினால் மக்கள் மூச்சுக் கோளாறு போல பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர்.இந்த வைரஸினால் உலகம் முழுவதும் 916 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் கொரோனா என்ற வைரஸ் கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரசின் செயல்பாடுகள் சார்ஸ் வைரஸை போலவே உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  தாலிபான்களுக்கு எதிராக போர் முழக்கம்- மிரட்டும் 5 சிங்கங்களின் பூமி

விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு தொற்றிய இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு விரைவில் பரவுவதாக சீன நாட்டின் தேசிய சுகாதாரத்துறை தெரிவித்து எச்சரித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசின் அறிகுறிகள் என்ன?

*காய்ச்சல்

*இருமல், மூச்சு திணறல்

ALSO READ  நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி !

*மிகுந்த உடல் வலி

*உடல் சோர்வு

*வாந்தி, வயிற்றுப்போக்கு

இந்த மாதிரி அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்க்கவும். மேலும் முடிந்தவரை கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் இருந்து 90,000விலங்குகள் உயிருடன் மீட்பு

Admin

பிடனின் தேர்தல் வாக்குறுதி…….

naveen santhakumar

என்ஆர்சி.யால் 20 கோடி முஸ்லிம்களுக்கு பாதிப்பு: அமெரிக்க நாடாளுமன்றம் அறிக்கை

Admin