உலகம்

தாலிபான்களுக்கு எதிராக போர் முழக்கம்- மிரட்டும் 5 சிங்கங்களின் பூமி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானமும் தாலிபான்கள் முன்னால் மண்டியிட்டு அடிபணிந்த நிலையில் ஒரே ஒரு மாகாணம் மட்டும் துணிச்சலாய் போருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எங்கிருந்து வந்தது இந்த துணிச்சல் யார் இவர்கள் இவர்களின் வரலாறு என்ன என்பது குறித்து காணலாம்

தாலிபான்களுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானில் 33 மாகாணங்கள் எதிர்ப்பே இல்லாமல் அடிபணிந்த . ஆனால் ஆப்கனில் எஞ்சியுள்ள பஞ்ச்ஷிர் மாகாணம் மட்டும் தாலிபான்களுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது. முடிந்தால் வந்துப்பார் ஒரு கை பார்ப்போம் என சவால்விட்டுள்ளனர் தீரத்துக்கு பெயர்பெற்ற பஞ்ச்ஷிர் போராளிகள்.

காபூலுக்கு வடகிழக்கில் 100 கி.மீ தொலைவில் ஹிந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு மாகாணம் `பஞ்ச்ஷிர்’.

பஞ்ச்ஷிர் என்றால் பாரசீக மொழியில் ஐந்து சிங்கங்கள் என்ற பொருள். பெயருக்கு ஏற்றாற்போல துணிச்சல் காரர்களான இம்மக்கள் யாருக்கும் அடிபணியாத சிங்கமாக மிரட்டி வருகிறார்கள்.

ஆம், ஆப்கானின் நீண்ட வரலாற்றில் நடந்த பல்வேறு படையெடுப்புகளிலும் வெளிநாட்டாவர் தொடங்கி தலிபான்கள் போன்ற பயங்கரவாத இயக்கத்தினராலும் கூட இதுவரை கைப்பற்றப்படவில்லை

1970-80 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் முழுவதையும் ஆக்கிரமித்து 10 ஆண்டுகள் போரிட்ட ஆனானப்பட்ட சோவியத் ரஷ்யா முன்பு கூட பஞ்ச்ஷிர் மட்டும்தான் அடிபணியவில்லை.

10-ஆம் நூற்றாண்டில், பஞ்ச்ஷிரை சேர்ந்த 5 சகோதரர்கள் வெள்ள பெருக்கை கட்டுப்படுத்த ஓர் அணையை கட்டினார்கள். இதனால் மன்னர் கஜினி சுல்தான் மஹ்மூது இப்பகுதியை 5 சிங்கங்களின் பள்ளத்தாக்கு என்று கூறினான்.

ALSO READ  புதிய மின்சார விமானத்தை அறிமுகம் செய்த ரோல்ஸ் ராய்ஸ்

தற்போது 512 கிராமங்களுடன் 7 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள இப்பகுதியில், சுமார் 1,73,000 மக்கள் வசிக்கின்றனர்.

தாஜிக் இனத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தப் பகுதியில் அவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

சோவியத்தையும், தாலிபான்களையும் எதிர்த்த தீரம்மிக்க முஜாகிதீன்களில் தளபதி அகமத் ஷா மசூத், இந்த பஞ்ச்ஷிர் பகுதியைச் சேர்ந்தவர்தான். இவர் பஞ்ச்ஷிர் சிங்கம் என்றே அழைக்கப்பட்டார்.

அவரது தலைமையில் இயங்கிய வடக்கு கூட்டணிப் படைகள் சோவியத் யூனியனுக்கும் பின்னாளில் உள்நாட்டுப் போரின்போது தாலிபான்கள் உள்ளிட்ட போராட்டக்குழுக்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிவருகிறது.

‘வடக்கு கூட்டணி’ இந்தியா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற நாடுகளின் ஆதரவைக் கொண்டுள்ளது.

முக்கியமாக தாலிபான்களுக்கு எதிராக போராடிய அகமத் ஷா மசூதுக்கு இந்தியா வெளிப்படையாகவே ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை தஜிகிஸ்தான் வழியாக தந்துதவியது.

1996 மற்றும் 2001-க்கு இடையில் தலிபான்கள் முழு நாட்டையும் கைப்பற்றுவதை தடுக்கும் ஒரு முக்கிய காரணியாக `வடக்கு கூட்டணி’ விளங்கியது.

ஆனால் அல்கொய்தா மற்றும் தலிபான்களின் சதித்திட்டத்தால் அஹ்மத் ஷா மசூத் கொல்லப்பட்டார்.

அஹ்மத் ஷா மசூத்-க்கு பின் பஞ்ச்ஷிர் மாகாணத்தை அரணாக காத்து வரும் ‘வடக்கு கூட்டணி’யை அவரின் வழித்தோன்றல்களால் வழிநடத்தப்பட்டு வருகிறது.

தற்போது ‘வடக்கு கூட்டணி’ வழிநடத்தி வரும் அகமது ஷா மசூதின் மகன், அகமது மசூத் தாலிபான்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

அமெரிக்கா விட்டுச் சென்ற நவீன ஆயுதங்கள் தாலிபான்களிடம் இருப்பதால் அவர்களை எதிர்க்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஆயுதங்களை தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ALSO READ  120 மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை படைத்த மாணவி

இதனிடையே நான் தான் ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபர் என அறிவித்துள்ள துணை அதிபர் அம்ருல்லா சலேவும் பஞ்ச்ஷிர்காரர்தான். மேலும், துணை அதிபராவதற்கு முன் கமாண்டர் அகமத் ஷா மசூதின் வலதுகரமாக திகழ்ந்தவர். உள்நாட்டு போரின்போது தலிபான்களாய் கதிகலங்க செய்தவர். இவரை பலமுறை கொள்ள முயன்றும் தலிபான்களால் இவரை எதுவும் செய்யமுடியவில்லை .

தற்போது அம்ருல்லாவும் பஞ்ச்ஷிர் பகுதியில், தலிபான்களுக்கு எதிராக ஓர் எதிர்ப்பு அணியை உருவாக்கும் வேலையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பல நூறு கிலோ மீட்டர் தூரம் நீண்டுள்ள இந்துகுஷ் மலைத் தொடர்கள் பஞ்ச்ஷிர் மாகாணத்துக்கு, அரணாய் காத்து நிற்கின்றன.

பஞ்ச்ஷிரின் அமைவிடம், அதன் தலைவணங்காமைக்கு முக்கிய காரணமாக இருப்பதையும் மறுக்க முடியாது. பஞ்ச்ஷிர் மாகாணத்தில் இருந்து எழுந்துள்ள போர்க்குரலும் அதன் தோல்வியடையா பின்னணியும் ஆப்கன் மக்களுக்கு நம்பிக்கை கீற்றை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.

அதேசமயம் முன்பு போராளிகளாக இருந்த தலிபான்கள் இப்போது தொழில்முறை ராணுவ வீரர்களாக உருவெடுத்துள்ளனர். அமெரிக்கப் படைகளால் விட்டுச்செல்லப்பட்ட அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு கவசங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் தலிபான்களை ஒரு சக்திவாய்ந்த குழுவாக மாற்றி அமைத்துள்ளன.

தற்போது பஞ்ச்ஷிர் மாகாணத்தை சுற்றி போர்மேகங்கள் சூழ்ந்துள்ளதால் பஞ்ச்ஷிரை நோக்கி உலக நாடுகளின் பார்வை திரும்பியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேருந்து சாலையில் கவிழ்ந்து 5 பேர் பலி..

Shanthi

முதியோர் இல்லங்களில் 7500 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல்…

naveen santhakumar

நம்ப முடியாத உணவுச் சண்டை பெற்றுத் தந்த விருது.

naveen santhakumar