உலகம்

ஹனிமூன் சென்ற இடத்தில் மருமகனை கரெக்ட் பண்ணிய மாமியார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹனிமூன் சென்ற இடத்தில் மாமியார் ஒருவர் தன் மருமகளை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

லண்டனை சேர்ந்த லாரன் வால் என்ற பெண் கடந்த 2004 ஆம் ஆண்டு பால் ஒயிட் என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டார். அதுவும் ஒரு குழந்தை பிறந்த பிறகுதான். வெகு விமர்சையாக நடைபெற்ற திருமணத்தை லாரன் தாய் ஜூலி முன்னின்று நடத்தி வைத்தார்.

இதன் பின் இரண்டு வாரங்கள் ஹனிமூன் கிளம்பிய இந்த ஜோடியுடன் தாய் ஜூலியும் பயணித்துள்ளார். அங்கு மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை கழித்த மூவரும் ஊருக்கு திரும்ப பேரதிர்ச்சி காத்திருந்தது.

ALSO READ  47 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் மோதிரம் ...

லாரனின் சகோதரி ஒருவர் எதேச்சையாக ஜூலியின் மொபைலை எடுத்துப் பார்க்க, அதில் பால் ஒயிட்டுடன் இருந்த ஆபாச உரையாடல்களை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் ஹனிமூன் சென்ற இடத்தில் மாமியாரும் மருமகனும் மிக நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லாரன், பால் ஒயிட்டுடன் செய்த சண்டையால் அவர் மாமியார் ஜூலி உடன் சென்று விட்டார்.

லாரன் வால் – பால் ஒயிட் இடையே 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதிலிருந்து சரியாக ஆறு ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பால் ஒயிட் – ஜூலி திருமணம் நடைபெற்றது. தன் குழந்தையின் எதிர்காலம் கருதி இந்தத் திருமணத்தில் லாரன் கலந்து கொண்டார். அடுத்த ஒன்பதாவது மாதத்தில் ஜூலியும் ஒரு குழந்தையை பெற்றெடுத்தது தான் இந்த சோக கதையை உச்சம்.

ALSO READ  கொரோனா மரணங்கள்.. பிரம்மாண்ட குழிகள்... தயாராகும் லண்டன் கல்லறைகள்....

தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் லாரன் தன் வாழ்வில் நடந்த அந்த கசப்பான சம்பவங்களை தன்னால் இன்னும் மறக்க முடியவில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நோபல் பரிசுகளுக்கான பட்டியல் இன்று முதல் வெளியீடு:

naveen santhakumar

கொரோனாவால் இலங்கையில் முதல் மரணம்….

naveen santhakumar

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

Admin