தமிழகம்

அமெரிக்காவில் தலைமை நீதிபதியான திருநெல்வேலிக்காரர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவில் உள்ள அப்பீல் கோர்ட்டில் திருநெல்வேலியை சேர்ந்த ஒருவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க நாட்டில் சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்த நிலையில் கொலம்பியா சர்கியூட் அப்பீல் கோர்ட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கோர்ட்டின் தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழரான பத்மநாபன் ஸ்ரீகாந்த் சீனிவாசன் (வயது 52) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விஷயம் என்னவென்றால் இவர் தமிழ்நாட்டின் தென்மாவட்டமான திருநெல்வேலியை பூர்விகமாக கொண்டவர். திருநெல்வேலி டவுண் அருகேயுள்ள மேல திருவேங்கடநாதபுரத்தை இவரது தந்தை பத்பநாபன் சீனிவாசன்அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராகவும், தாய் சரோஜா அதே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியையாகவும் பணியாற்றியுள்ளனர்.

ALSO READ  மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று;ஆரம்ப சுகாதார நிலையம் மூடல் !

1960-களில் அமெரிக்கா போய் குடியேறிய இவர்களது குடும்பம். சண்டிகாரில் பிறந்த ஸ்ரீகாந்த் சீனிவாசன் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டப்பட்டமும் பெற்று தொடர்ந்து எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.

பின் அமெரிக்க அப்பீல் கோர்ட்டில் நீதிபதியாக பதவிவகித்த ஹார்வி வில்கின்சன்னிடம் குமாஸ்தாவாக இருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் அங்கு முதன்மை துணை அட்டார்னி ஜெனரல் பதவி வகித்தார். ஒரு கட்டத்தில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கும் பரிசீலிக்கப்பட்டார்.

ALSO READ  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் நாளை ஆலோசனை :


அமெரிக்க அப்பீல் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக தெற்காசிய நாட்டை சேர்ந்த ஒருவர் இருப்பது இதுவே முதல் முறை என்பதால் அந்த வகையில் தமிழரான ஸ்ரீகாந்த் சீனிவாசன் புதிய சாதனை படைத்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேருந்தில் ஆண்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படவில்லை-அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

Shobika

காய்கறி திட்டத்தில் முறைகேடு நடந்தால் உடனடி நடவடிக்கை !

News Editor

தமிழில் அர்ச்சனை திட்டம் – கோவில்களில் துவக்கம்

naveen santhakumar