இந்தியா

உடற்பயிற்சி செய்தால் platform ticket இலவசம் … எங்கு தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் உடற்பயிற்சி செய்தால் இலவசமாக platform ticket கிடைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஃபிட் இந்தியா (fit india movement) என்ற இயக்கத்தை தொடங்கினார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக இத்தகைய இயக்கமானது தொடங்கப்பட்டது.

இதன் ஒருபகுதியாக டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் சில நிமிடங்கள் நாம் சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இலவச நடைமேடை சீட்டு(platform ticket) பெறலாம்.

ALSO READ  பஞ்சாப் தேர்தலில் பஞ்சாக பறந்த பாஜக; 53 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் இமாலய வெற்றி..! 

இதுகுறித்து ட்வீட்(Tweet) செய்துள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், உடற்தகுதியை ஊக்குவிக்க இத்தகைய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த இயந்திரத்தில் சிறுவன் ஒருவன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிகாரின் குந்தன் குமார் எனும் மாணவனின் பெற்றோர்களா….! பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மியும், நடிகை சன்னிலியோனும்..!

News Editor

நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போட தயார்: டெல்லிக்கு கடிதம் எழுதிய தமிழக காவலர்…

Admin

Pubg விளையாடிய இளைஞருக்கு நேர்ந்த கதி

Admin