உலகம் தொழில்நுட்பம் விளையாட்டு

2019 ஆம் ஆண்டின் டாப் ட்விட் : விளையாட்டு துறையில் முதல் இடம் யாருக்கு தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2019 ஆம் ஆண்டின் டாப் ட்விட் : விளையாட்டு துறையில் முதல் இடம் யாருக்கு தெரியுமா?

ட்விட்டர் இந்தியா நிறுவனம் #This happened2019 என்ற ஹேஸ்டேக்கில் 2019ம் வருடத்தில் அதிகம் பகிரப்பட்ட ட்வீட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் விளையாட்டு துறைகளின் அதிகம் பகிரப்பட்ட ட்விட்களில் குறித்தும் கூறப்பட்டது. அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, இந்நாள் கேப்டன் விராட் கோலி கூறிய பிறந்த நாள் வாழ்த்து ட்விட் தான் அதிகம் பகிரப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த ஜூலை 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய தோனிக்கு ரசிகர்களால் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சக விளையாட்டு வீரர்களும் ட்விட்டரில் வாழ்த்தினர். அதில் கேப்டன் விராட் கோலியின் வாழ்த்து தான் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

ALSO READ  பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள தடை - உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

அந்த ட்வீட்டில் இருவரும் நடந்து வரும் புகைப்படத்தை பகிர்ந்து “பிறந்த நாள் வாழ்த்துகள் மஹி பாய். ஒரு சிலரால் மட்டுமே நம்பிக்கை மற்றும் மரியாதையின் அர்த்தத்தை உணர முடியும். அதனால் தான் உங்களை நீண்ட வருடங்களாக நான் நண்பராக பெற்றிருக்கிறேன். நீங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த சகோதரர். நான் சொன்னதைப் போல் எப்போதும் என்னுடைய கேப்டன் நீங்கள்தான் “ என அந்த ட்வீட்டில் எழுதியிருந்தார். இந்த ட்விட் 45 ஆயிரத்திற்கும் மேல் பகிரப்பட்டுள்ளது. இந்த ட்வீட்தான் விளையாட்டுத் துறையில் அதிகம் பகிரப்பட்ட ட்வீட்டாக ட்விட்டர் இந்தியா அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலை. கடுப்ப கெளப்பாதிங்க பாஸ்.

Admin

சிறுநீருக்கு பதிலாக ஆல்கஹாலை வெளியேற்றும் பெண்- மருத்துவர்கள் அதிர்ச்சி…

naveen santhakumar

கொரோனா சிகிச்சை மையமாக மாறிய பயணிகள் கப்பல் :

Shobika