சினிமா

ஸ்வீட் சர்ப்ரைஸ்… “ராஜா ராணி” ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடிக்கு என்ன குழந்தை தெரியுமா???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்த போது ஆல்யா மானசா – சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

இந்நிலையில் நேற்று ஆல்யா மானசாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதை அதிகாரபூர்வமாக ஆல்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் சஞ்சீவ் அறிவித்துள்ளார்.

“எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். உங்களின் ஆசீர்வாதம் வேண்டும். தாய் மற்றும் மகள் இருவரும் நன்றாக இருக்கின்றனர்.பாப்பு குட்டிக்கு குட்டி பாப்பு குட்டி” என குழந்தையா பற்றி மகிழ்ச்சியாக பேசியுள்ளார் சஞ்சீவ்.

ALSO READ  சூப்பர் சிங்கர் சர்ச்சை - பென்னி தயாள் விலகல்

சில நாட்களுக்கு முன் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்தது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

தற்போது சஞ்சீவ் அல்யா மானசா ஜோடிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு சஞ்சீவ்-ஆல்யா மானசா இருவரும் ஒரு புதிய BMW காரை வாங்கியுள்ளனர். அது பற்றி ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்திருந்தார்.

ALSO READ  டிஸ்கவரி சேனலில் நடிகர் ரஜினிகாந்த்

“Totally excited. எங்கள் வாழ்க்கையில் அடுத்த பெரிய படி இது” என கணவர் சஞ்சீவுக்கு நன்றி கூறியிருந்தார் ஆல்யா மானசா.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் வலிமை படத்துக்கு வந்த சிக்கல் !  

News Editor

நடிகை ஸ்ரீதேவி மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்….

Shobika

இயக்குநராக மாறிய அட்டகத்தி தினேஷ் !

News Editor