உலகம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி கொரோனாவிலிருந்து குணமடைந்தார்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சிகிச்சைக்கு பிறகு  குணம் அடைந்துள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி ட்ரூடோ சில வாரங்களுக்கு முன் லண்டன் சென்று திரும்பினார். இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 12 முதல் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். 

பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது குழந்தைகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தோற்று இல்லை என்று தெரியவந்தது. 

ALSO READ  கொரோனா: பீதியடைய வேண்டாம் சாதாரண காய்ச்சல் போன்றதுதான்- குணமடைந்தவர் கூறுகிறார்...

ஆனாலும் பிரதமரும், பிரதமர் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர். பிரதமர் ட்ரூடோ தனி அறையில் இருந்து அலுவலக பணிகளை கவனித்து வந்தார்.

இந்நிலையில் பிரதமர் ட்ரூடோவின் மனைவி சோஃபி கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளார். ஒட்டாவா பொது சுகாதார (Ottawa Public Health) துறை மற்றும் மருத்துவர்கள் சோஃபி பாதிப்பிலிருந்து மீண்டு விட்டார் என்று சான்றளித்துள்ளனர்.

ALSO READ  ரஷ்யாவிற்கு கனடா ஆதரவு அளிக்காது - ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டம்...
courtesy.

இதையடுத்து சோஃபி ட்ரூடோ தான் குணமடைய பிரார்த்தனை செய்த, வாழ்த்திய அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மரம் மற்றும் செடியை சேதப்படுத்தாமல் கொழுந்துவிட்டு எரியும் அதிசய நெருப்பு ஆச்சரியத்தில் மக்கள்…

naveen santhakumar

சரித்திரம் படைத்த ஆஸ்கர் பிஸ்டோரியஸ் பிறந்த தினம் – நவம்பர் 22:

Admin

5வது மாடியிலிருந்து விழுந்த 8 மாத குழந்தை: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆச்சரியம்…

Admin