உலகம்

கொரோனா பரவல்- ஜெர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிராங்க்பர்ட்:-

கொரோனா வைரஸ் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் மொத்தமாக தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் பொருளாதாரம் மிக அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது அதன் தற்போதைய பொருளாதார வளர்ச்சி – 6.8 சதவீதமாக உள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் (Frankfurt) உள்ளடக்கிய ஹெஸ்ஸே (Hesse)மாகாணத்தின் நிதி அமைச்சர் தாமஸ் ஷேஃபர் (Thomas Schaefer) (54) தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் அருகே ஹோச்செய்ம் (Hochheim) நகரின் ரயில் தண்டவாளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ  உருமாறிய கொரோனா; ஜெர்மனியில் மீண்டும் பொது முடக்கம் அமல் !

தாமஸ் ஷேஃபர் ஜெர்மனியின் அதிபர் (Chancellor) ஏஞ்சலா மெர்க்கல்-ன் கிறிஸ்தவ குடியரசு கூட்டணி கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

கடந்த பத்தாண்டுகளாக ஹிஸ்ஸே மாகாணத்தில் நிதியமைச்சராக இருந்து வருகிறார். ஜெர்மனியின் மிகப்பெரிய மற்றும் வர்த்தக நகரமாக பிராங்பர்ட் இந்த மாகாணத்தில் தான் உள்ளது.

இதுகுறித்து கூறிய அம்மாகாண ஆளுநர் வோல்கர் பௌஃபியர் (Volker Bouffier) :-

இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது நம்புவதற்கு கடினமாக உள்ளது. தாமஸ் இரவு பகல் பாராது ஜெர்மன் வளர்ச்சிக்காக உழைத்தவர் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் மிகவும் துன்பத்தில் உள்ளனர் அதோடு ஜெர்மனியின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் மனமுடைந்து இந்த முடிவை தேர்ந்தெடுத்துள்ளார்.

ALSO READ  விமானத்தில் செல்வதுபோல் விண்வெளி செல்வதற்கும் வாகனம் தயார் செய்யப்படும் - மயில்சாமி அண்ணாதுரை

ட்ரான்ஸ்போர்ட் நகரில் ஜெர்மனியின் ட்யூட்ஷ் பாங்க் (Deutsche Bank) காமர்ஸ் பேங்க் (Commerzbank) தலைமை அலுவலகங்கள் உள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கியும் (The European Central Bank) இங்கு தான் உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய-சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

News Editor

இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய ஆல்ப்ஸ் பனிமலை…

naveen santhakumar

ஐ.நா.வின் விருதினை தட்டிச் செல்லும் இந்திய இளம் தொழிலதிபர்:

naveen santhakumar