உலகம்

தேச துரோக வழக்கில் முஷாரப்பிற்கு மரண தண்டனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப், அந்நாட்டு அரசில் பெரும் அதிகாரம் பெற்று திகழ்ந்தார். 2001 முதல் 2008 வரை அதிபராக இருந்தபோது 2007ல் முஷாரப் பாகிஸ்தானில் அவரச நிலையை அமல்படுத்தினார். பாகிஸ்தானில் தவறான முறையில் அவசர நிலை பிரகடனம் செய்ததற்காக பர்வேஸ் முஷாரஃப் மீது அந்நாட்டு அரசு தேசத் துரோக வழக்கு பதிவு செய்தது. அத்துடன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டது. அவர் மீதான வழக்கு பெஷாவரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

ALSO READ  ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் -சீனாவில் அதிசயம்

அரசியல் அவசர நிலை பிரகடனம் செய்து, அரசியல் எதிரிகளை பழிவாங்கியதாகவும், நாட்டிற்கு எதிராக சதி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் 2016ல் இருந்து துபாயில் வசித்து வருகிறார். 76 வயதான அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நீதிபதி யவார் அலி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது. விசாரணை முடிந்த நிலையில், முஷாரப்பிற்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.




Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரயில் நிலையத்தில் சும்மா நின்ற இளைஞரை சம்பவம் செய்த பெண்

Admin

சீன உளவு கப்பலின் தாக்கத்தை உன்னிப்பாக கண்காணிப்போம்..

Shanthi

மரம் மற்றும் செடியை சேதப்படுத்தாமல் கொழுந்துவிட்டு எரியும் அதிசய நெருப்பு ஆச்சரியத்தில் மக்கள்…

naveen santhakumar