லைஃப் ஸ்டைல்

குளிர்காலத்தில் கமலா ஆரஞ்சு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டது. இந்த குளிர்காலத்தில் மிகவும் குளிரான, புளிப்பான உணவுகளை பொதுவாக அனைவரும் தவிர்ப்பார்கள். பழ வகைகளில் புளிப்பு சுவையுடைய பழங்கள் உள்ளன. பெரும்பாலும் குளிர்காலத்தில் ஆரஞ்சு பழங்களை அறவே தவிர்ப்பார்கள். ஆனால் ஆரஞ்சு வகைகளில் ஒன்றான கமலா ஆரஞ்சு குளிர்காலத்திற்கு நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில் குளிர் காலத்தில் அதிகரிக்கும் நமது உடலின் வெப்பநிலையை சீராக வைக்க கமலா ஆரஞ்சு பெரிதும் உதவுகிறது. அதே சமயம் உணவு செரிமானத்திற்கும், வறண்ட சருமத்தில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இதய நோய்,சிறுநீரகக் கற்கள் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் கமலா ஆரஞ்சு பெரும் பங்கு வகிக்கிறது.

பொதுவாக உடல் எடை குறைய டயட் இருப்பவர்கள் கமலா ஆரஞ்சை அதிகமாக சாப்பிடலாம். காரணம் இதில் உள்ள நார்ச்சத்து அதிகளவு உணவு உண்பதைத் தடுக்கும். மேலும் இப்பழச் சாற்றினை முகத்தில் தடவி வர சருமம் பொலிவுறும்.இத்தகைய நன்மைகளை கொண்ட கமலா ஆரஞ்சு தினமும் உணவில் சேர்க்க விட்டாலும் அடிக்கடி நாம் உண்ணும் பழங்களில் சேர்க்கலாம்.


Share
ALSO READ  தூக்கமின்மை பிரச்சனையா?, கொஞ்சம் சீஸ் நல்ல தூக்கம்...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அசைவப்பிரியரா நீங்க….?????அப்போ கண்டிப்பா இதை படிங்க….

naveen santhakumar

அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் அதிபர் டிரம்ப் குறித்துஅதிர வைக்கும் தகவல்கள்

Admin

கழுத்தின் கருமையை போக்க பயனுள்ள குறிப்புகள் :

Shobika