இந்தியா சினிமா

இந்திய சூப்பர் ஸ்டார்கள் இணைந்து வெளியிட்டுள்ள குறும்படம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது  இந்நிலையில் பல பிரபலங்கள் சமூக விலகலை வலியுறுத்தியும் கொரோனா குறித்த பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இப்போது, சூப்பர் ஸ்டார் முதன்முறையாக ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். பாலிவுட், டோலிவுட், மோலிவுட் மற்றும் சாண்டல்வுட்டைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார்.

courtesy.

இப்படத்தை பிரசூன் பாண்டே இயக்கியுள்ளார்.  தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் செம வைரலாகிவருகிறது.

ALSO READ  அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.. ரஜினிகாந்த் அறிவிப்பு ..!

இதில் சிறப்பு என்னவென்றால், அனைத்து நடிகர்களும் தங்கள் வீட்டிலிருந்தே இந்த வீடியோவை பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

முழுவதும் வீட்டிலேயே இருந்து எடுக்கப்பட்டுள்ள சூப்பரான இந்த குறும்படத்தில் அமிதாப் பச்சன், மம்மூட்டி, மோகன் லால், சிரஞ்சீவி, புரோசென்ஜித் சாட்டர்ஜி, சோனாலி குல்கர்னி, சிவராஜ்குமார், தில்ஜித் டோசன்ஜ், ரன்பீர் கபூர், ஆலியா பாட், மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளனர்.

ALSO READ  தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கினார்…!

‘Family’ என தலைப்பிடப்பட்டுள்ள இக்குறும்படம்மூலமாக, இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், இந்த வீட்யோ மூலம் அன்றாட ஊதியம் பெறுபவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நிதி திரட்டவும் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வருண் தேஜ், சாய் தரம் தேஜ் ஆகியோர் விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாடு தழுவிய வேலை நிறுத்தம் தொடங்கியது

Admin

வீடு புகுந்து குழந்தையை தூக்கிச்சென்ற சிறுத்தை…

naveen santhakumar

‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor