உலகம்

விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள சூரிய வளி மண்டலத்தின் சிக்கலான புகைப்படங்கள்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அதிஉயர் தெளிவு high-resolution புகைப்படங்கள் மூலமாக  முன்பு நினைத்ததைவிட சூரியனின் வளிமண்டலம் மிகவும் சிக்கலானது என்று தெரியவந்துள்ளது.

இந்த புகைப்படங்கள் நாசாவின் High-resolution Coronal Imager Telescope மூலமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படங்களை தற்பொழுது மத்திய லங்காஷயர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். 

இந்த புகைப் படங்களின் மூலமாக சூரியனின் வளிமண்டலம் இருளாக அல்லது காலியாக இருக்கும் என்று நினைத்த பகுதிகள் 311 மைல் அகலமான வெப்பமான மின்னூட்டம் பெற்ற வாயு இலைகளால் சூழப்பட்டுள்ளது. இவற்றின் வெப்பநிலை கிட்டத்தட்ட 1.8 மில்லியன் பாரன்ஹீட்டுக்கு அதிகமாக உள்ளது இவற்றின் அளவு லண்டனுக்கும் பெல்பாஸ்ட் நகருக்கும் இடையே உள்ளதை விட பெரிதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரிய வளி மண்டலத்தில் மிகச்சிறிய பகுதியை நாசாவின் இந்த தொலைநோக்கி படம் பிடித்துள்ளது கிட்டத்தட்ட 43 மைல் அளவு கொண்ட பகுதியை படம் பிடிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் உள்ள டார்க் பகுதிகளில் மிக வெப்பமான காந்த இழைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் ஆனாலும் இந்த காய்ந்த இலைகள் குறித்து தற்போது வரை எந்த தெளிவான முடிவுகளும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

ALSO READ  நாசா அதிரடி போட்டி அறிவிப்பு - பரிசு வெல்ல நீங்கள் ரெடியா..???

 நாசாவின் முதன்மை ஆய்வாளர்கள் ஒருவரான டாக்டர் எமி வைன்பார்க்கர் கூறுகையில் 

Dr. Amy winebarger.

சூரியன் குறித்தும் சூரியனின் வளிமண்டலம் குறித்தும் ஆராய்ச்சிகள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள இந்த முடிவுகள் நிச்சயமாக ஒரு மைல்கல்லாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  NASA-வின் அதிர்ச்சி அறிக்கை.....இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம்.....

தற்பொழுது நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் மற்றும் ஐரோப்பிய விண்வெளி  ஆய்வு மையத்தின் சோலார் ஆர்பிட் ஆகியவை தற்போது சூரியனை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐநா சபைக்கு சொந்தமான காரில் பெண்ணுடன் உடலுறவு கொண்ட நபர்- வைரலாகும் வீடியோ… 

naveen santhakumar

ஆச்சரியம்….ஆனால் உண்மை….இந்த நாட்டு கடிகாரத்தில் மட்டும் 11 எண்கள் தான் இருக்கு….

naveen santhakumar

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் பேரிடர் அவசரநிலை பிரகடனம்…

naveen santhakumar