உலகம்

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் பேரிடர் அவசரநிலை பிரகடனம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


நியூயார்க்:-

 உலக அளவில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அமெரிக்காவின் ஏற்பட்ட உயிரிழப்புகள் இத்தாலியை கடந்துள்ளது, இதுவரை அமெரிக்காவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மிக மோசமான பாதிக்கப்பட்ட நகரமாக நியூயார்க் திகழ்கிறது. இதையடுத்து நியுயார்க் (NewYork) மேயர் ஆண்ட்ரூ கௌமோ (Andrew Cuomo) மற்றும் நியூயார்க் நகர் (NewYork City) மேயர் பில் டெ ப்லாஸியோ (Bill de Blasio) வரும் செப்டம்பர் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். 

ALSO READ  பாகிஸ்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்ட முதல் ஹிந்து இளைஞர்....

இதையடுத்து நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் பேரிடர் அவசர நிலையை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை.

மேலும், பெடரல் நிதியை அமெரிக்காவில் உள்ள மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சுத்தம் செய்யப்படாத ஏ.சி: புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்- ஆராய்ச்சி முடிவுகள் …!

naveen santhakumar

ஸ்பெயினில் இளம் கால்பந்து பயிற்சியாளர் 21 வயதில் கொரோனாவால் பலியான பரிதாபம்….

naveen santhakumar

வாங்க அழுது கொட்டி தீர்க்கலாம் : ஸ்பெயினில் அழுவதற்கென்று தனி அறை

News Editor