உலகம்

பிரிட்டன் இளவரசி திருமணம் ரத்து காரணம் என்ன…???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரிட்டன் இளவரசி-ன் திருமணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மகாராணியின் பேத்தியான பீட்ரைஸ்-க்கும் (31) (Beatrice) இங்கிலாந்தின் பெரும் கோடீஸ்வரரான எடொர்டோ மேப்பிலி மோஸ்ஸி-க்கும்(37) (Edoardo Mapelli Mozzi) வரும் மே 29ஆம் தேதி செயின்ட் ஜேம்ஸ் மாளிகையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.  

ஆனால் கொரோனா பரவல் காரணமாக நடைபெற இருந்த இளவரசியின் திருமணம் ரத்து செய்யப்படுவதாக பக்கிங்காம் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது. பக்கிங்காம் அரண்மனை தோட்டத்தில் நடைபெற இருந்த வரவேற்பு நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது

St.James Palace.

இளவரசி பீட்ரைஸ் யோர்க்-ன் இளவரசர் ஆண்ட்ரு (Duke of York)  யோர்க்-ன் இளவரசி சாரா தம்பதிகளின் மகளாவார்.

ALSO READ  அர்ச்சகர்கர், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை; அறநிலைத்துறை அறிவிப்பு !

தற்போதைக்கு இங்கிலாந்து திருச்சபை திருமணத்தில் 5 பேர் மட்டுமே பங்கேற்பதற்கு அனுமதி அளித்துள்ளது. மணமக்கள் திருமணம் செய்து வைக்கும் பாதிரியார் தவிர்த்து இரண்டு சாட்சிகள் தான் அனுமதிக்கப்படுவார்கள். 

தவிர பிரிட்டனில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றவர்களை சந்திப்பதை தவிர்க்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் பிரிட்டன் மகாராணி எலிசபெத் (93) அவரது கணவர் இளவரசர் பிலிப் (97) ஆகியோரம் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது.

ALSO READ  கொரோனா 3-வது அலை; வந்துவிட்டது 4.2 வைரஸ் - ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

எனவே தீர ஆலோசனை செய்து அதன் பிறகு தற்போதைக்கு திருமணம் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல்: மாஸ்க் தட்டுப்பாட்டை போக்க இந்தியர் கண்டுபிடித்த புதிய வழிமுறை….

naveen santhakumar

உலகின் டாப் 5 புத்தாண்டு கொண்டாட்டம்

Admin

சமூக விலகலை கடைபிடிக்க பிரத்தியேக ஷூ ரெடி…

naveen santhakumar